‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Friday 31 August 2012

பெயர்தாங்கி முஸ்லிம்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்!

அன்றாட வாழ்கையில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் நமக்கு சொல்லித்தந்திருக்கிறது. அது தூங்கி எழுந்ததிலிருந்து இரவு தாங்க போகும் வரை மட்டுமல்ல இடையில் தீய கனவுகள் போன்றவற்றால் எழுந்திருக்க நேரிட்டால் அப்போதும் கூட நாம் என்ன செய்ய வேண்டும் என தூய இஸ்லாம் வரையறுத்திருக்கிறது.

அப்படிப்பட்ட இணையற்ற இறைவனால் அருளப்பட்ட இந்த மார்க்கத்தில் நம்முடைய நடைமுறை வாழ்க்கைக்கு என சொல்லப்படாத எந்த ஒரு அம்சமும் இல்லை. ஆனால் முஸ்லிம்களாகிய நாம் இன்று எத்தனை பேர் இந்த அற்புதமான வாழ்க்கை நெறிமுறையை விளங்கி வைத்திருக்கிறோம். மிக மிக குறைவு. நாம் அனைவரும் நம்மை அறிவு ஜீவிகளாக தன்னுடைய கருத்தை நிலைநாட்டுவதில் காட்டும் முனைப்பு மார்க்கத்தை அறிவதில் காட்டுவதில்லை.

ஒரே இறைவன் ஒரே தூதர் ஒரே வேதம் முஸ்லிம்களிடம் ஏன் முரண்பாடு?

இந்த தலைப்பு இன்றைய முஸ்லிம்களின் வாழ்கையை பிரதிபலிப்பதாக உள்ளது. இதற்கு காரணம் என்ன?

அல்லாஹ் தன் இறைச் செய்தியில் குறை வைத்து விட்டானா அல்லது நபி (ஸல்) அவர்கள் இறைவனுடைய செய்தியை அறிவிப்பதில் குறை வைத்து விட்டார்களா? நவூது பில்லாஹ் இதை நாம் முடிவு செய்ய வேண்டிய எந்த அவசியமும் உரிமையும் நமக்கில்லை. ஏனென்றால் இறைவனும் அவனது தூதர் நபி (ஸல்) அவர்களும் தங்கள் கடமையை சரியாக செய்து விட்டனர். நாம் தான் நமது கடமையை சரியாகச் செய்யாமலும் மார்க்கத்தை சரியாக விளங்காமலும் ஒரு இயக்கம் பிற இயக்கத்தை குறை கூறியும் காலத்தையும் நேரத்தையும் வீணடித்து இறைவனுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்து வருகிறோம்.

நிறைய முஸ்லிம்கள் மார்க்கத்தை அறிவதில் போதிய அக்கறை செலுத்துவதில்லை. பொருளாதாரத்தை பெருக்குவதில் தான் குறியாக

மெகா சீரியல்களால் வழி தவறும் சமுதாயம்!

நாள்தோறும் வெளிவரும் பத்திரிக்கை, தொலைக்காட்சி, திரைப்படம் போன்ற ஊடகங்களில் பொழுதுபோக்கு என்ற பெயரில் ஆபாசங்களும், வன்முறைகளும் அருவருக்கத்தக்க செய்திகளுமே வந்து கொண்டிருக்கின்றன. இதனை காணும் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் வயதானவர்கள் என அனைவரும் தங்கள் கடமைகளை மறந்து அதிலே கிடப்பதும் அதற்கேற்றவாறு தங்கள் வாழ்கையை மாற்றிக் கொள்வதும் வாடிக்கையாகி வருகிறது.

அல்குர்ஆனில் துஆக்கள்!

لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ
“உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்”. 21:87
 
 
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ \
“எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”. 7:23

Thursday 30 August 2012

மறுமையில் கழுதையாக மாறும் தொழுகையாளிகள்

தொழுகை என்பது இறைவனுக்கும், அடியார்களுக்கும் இடையில் இருக்கும் ஒரு முக்கியமான உரையாடல் நேரமாகும்.

இந்நேரத்தில் தொழுகையில் ஈடுபடும் தொழுகையாளிகள் இமாமை பின்பற்றி அவருடைய கட்டளைக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் உத்தரவாகும்.

ஆனால் இன்று தொழுகையில் ஈடுபடும் பெரும்பாலான தொழுகையாளிகள் இந்த விஷயத்தில் கவணம் எடுக்காமல் செயல்படுவது அவர்களை நரகத்தில் சேர்த்துவிடும் செயலாக மாறுகின்றது.

ஆம் தொழுவதின் மூலம் இறைவனிடம் பல நன்மைகளைப் பெற வேண்டும், மறுமையில் சுவர்க்கம் நுழைய வேண்டும் என்றெல்லாம் பலவாறு ஆசை வைக்கும் நம் சகோதரர்கள் தொழுகையில் இமாமை பின்பற்றும் விஷயத்தில் கவணயீனமாக இருக்கிறார்கள்.

ஒசாமா கொல்லப்பட்டது எப்படி? அமெரிக்க "மாஜி' வீரர் புதிய தகவல்

'அமெரிக்க அதிரடி படையினர் நுழையும் முன்பே அபோதாபாத் பங்களாவில் அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன்  இறந்து கிடந்தார்' என, புத்தகம் ஒன்றில் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த அல்-குவைதா தலைவரான ஒசாமா பின்லாடன், கடந்த ஆண்டு மே மாதம், பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்க கடற்படை பிரிவின் (சீல்) முன்னாள் அதிகாரி மார்க் பிஸ்சோனெட் என்பவர், மார்க் ஒவன் என்ற புனைப் பெயரில், ஒசாமா பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அடுத்த மாதம் வெளியாக உள்ள இந்த புத்தகத்தில் எழுதியுள்ள விவரங்கள், "மெயில் ஆன்லைன்' என்ற, இணைய தள பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

Wednesday 29 August 2012

மொபைல் சார்ஜரை எப்படி பயன்படுத்துவது? சில டிப்ஸ்கள்!

மொபைல் சார்ஜ் செய்யும் போது, வரும் போன்கால்களுக்கு பதிலளிப்பதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

ஆனால் நிறைய பேர் மொபைலை சார்ஜரில் போட்டுவிட்டும், மொபைலில் பேசி கொண்டே இருக்கின்றனர். இதனால் ப்ளக்கில் இருந்து அதிகப்படியான நெருப்பு வெளியாக வாய்ப்பிருக்கிறது.
மொபைல் முழுமையாக சார்ஜாகிவிட்டது என்று சில மொபைல்களில் தகவல்கள் வெளியாகிறது. இந்த தகவலை மொபைலில் பார்த்த உடன் சார்ஜில் இருந்து மொபைலை நீக்கிவிடுவது நல்லது.

பெரம்பலூர் அருகே பயங்கர விபத்து 5 பேர் சாவு

பெரம்பலூர் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை பழுதாகி நின்ற பேருந்து மீது, மற்றொரு தனியார் பேருந்து மோதியதில் திருச்சி அதிமுக பெண் கவுன்சிலர் உள்பட 5 பேர் இறந்தனர்.

சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற தனியார் பேருந்தை, திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த சு. தனகோபால் (29) ஓட்டினார்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, பெரம்பலூர் அருகேயுள்ள நாரணமங்கலம் தனியார் பெட்ரோல் பங்க் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்தபோது பேருந்தின் டயர் பழுதானது. இதனால், சாலையோரத்தில் பேருந்தை நிறுத்தி பழுது நீக்கும் பணியில் ஓட்டுநர் ஈடுபட்டிருந்தார்.

பற்களை பாதுகாக்க டிப்ஸ் ...!

பல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. அதுவும் சிறு வயதில் பல் போனால் சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும், முக அழகும் கெட்டுப் போய்விடும். பல் சொத்தையைக் கண்டு கொள்ளாமல் விட்டால் அது பல்லின் வேரை பலம் இழக்க செய்து பல்லை இழக்கும் நிலைக்கு தள்ளப்படும். தற்பொழுது உள்ள சிகிச்சை முறைகளின் மூலம் பல்லின் வேர்ப்பகுதியை பாதுகாத்து பல்லை விழாமல் காத்துக் கொள்ள முடியும். சொத்தைப் பல்லுக்கு ஆரம்பத்திலேயே வேர் சிகிச்சை செய்வதன் மூலம் 20 ஆண்டுகள் வரை பல்லை பாதுகாக்க முடியும் என்கிறார் பல் டாக்டர் கைலின்.

வாக்கு மாறாத பசு - குழந்தைகளுக்கான கதைகள்

காளிங்கன் என்ற இடையன் பல பசுக்களை பராமரித்து வருகிறான். அவன் ஒரு அதிகாலையில் தன் பசுக்களை அழைத்துத் தனக்குத் தேவையான அளவு மட்டுமே பாலைக் கறந்து கொண்டு மீதியைத் தங்கள் கன்றுகளுக்குத் தர அவற்றை அனுப்பி விடுகிறான். அந்தப்பசுக்களும் தங்கள் கன்றுகளைச் சேர காட்டு வழியே செல்கின்றன.

பெற்றோரை பராமரிக்க தவறும் பிள்ளைகள் - கலெக்டர் நடவடிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தில் பெற்றோரை பாதுகாப்புடன் பராமரிக்காத பிள்ளைகளை மீது நடவடிக்கை எடுக்கப்படுமென கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் பெற்றோர் நல்வாழ்வு விதிகளின்கீழ் பராமரிப்பு கோரியும், தனக்கு சொந்தமான சொத்துக்களை மகன் சந்திரசேகரனிடமிருந்து மீட்டுத்தர கோரியும் வேப்பந்தட்டை அடுத்த கை.களத்தூர் மஜிரா பாதாங்கியை சேர்ந்த பெரியசாமி மனு அளித்துள்ளார்.

Monday 27 August 2012

சந்திரனில் முதலில் காலடி வைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் தனது 82 ஆவது வயதில் மரணம்

சந்திரனில் காலடி வைத்த முதலாவது மனிதர் எனும் அமெரிக்காவின் நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் நேற்று இரவு காலமானார். 1930ம் ஆண்டு பிறந்த சந்திரனில் ஆறு வயதில் தந்தியுடன் முதல் வான் வெளி பயணத்தை மேற்கொண்டார். 1950 ம் ஆண்டளவில் கோரிய யுத்தத்தில் யுஅமெரிக்க கடற்படை ஜெட் வீரராக கடமை புரிந்து, 1962ம் ஆண்டு நாசாவுடன் இணைந்தார். 1969ம் ஆண்டு ஜூலை 20ம் திகதி சந்திரனில் தரையிறங்கிய அப்போலோ 11 செய்மதியின் மூலம் சந்திரன் தரையில் முதல் காலடி எடுத்து வைத்தார்.

செல்போன் கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி ?

செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் இன்றை உலகில் ஒரு அத்தியாவசிய ‘கருவியாகி’ யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில், செல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது.
ஏனெனில், நீங்க செல்போன் பயன் படுத்தா விட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் பாதிக்கவே செய்யும். குருவிகள் இதனால் தான் நகர்ப்புரங்களிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.

ரேஷன் கடையின் ஸ்டாக் நிலைய அறிய


Sunday 26 August 2012

மாபெரும் இரத்ததான முகாம் - 31/08/2012 வெள்ளிக்கி​ழமை

அஸ்ஸலாமு அலைக்கும்
 
இன்ஷா அல்லாஹ்
 
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் மற்றும் லத்தீஃபா அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் 31/08/2012 வெள்ளிக்கிழமை காலை 8:30 மணி முதல்  நடைபெற இருப்பதால் சகோதரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறது.
 
 
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்
துபை மண்டலம்
 

beautiful recitation - Surat al-Fajr سورة الفجر


Saturday 25 August 2012

தங்கத்தின் விலை கடும் உயர்வு

தங்கம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது
ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.23ஆயிரத்தை தாண்டி விட்டது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.39ம், சவரனுக்கு ரூ.312 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை சமீப காலமாக தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருகிறது. பண்டிகை சீசனுக்கு முன்பு வரை, ஏற்ற இறக்கமாக கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்த நிலையில், தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

Friday 24 August 2012

பெருநாள் தொழுகை-மேற்கு பள்ளிவாசல்

பெருநாள் தொழுகை-மேற்கு பள்ளிவாசல்

நோன்பு பெருநாள் அன்று மேற்கு பள்ளிவாசலில் காலை 08:30 மணிக்கு பெருநாள் தொழுகை மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.இதில் பெருந்திரளான நமதூர் பெருமக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்....


நோன்பு பெருநாள் தொழுகை-கிழக்கு பள்ளிவாசல்

பெருநாள் தொழுகை-கிழக்கு பள்ளிவாசல்

நோன்பு பெருநாள் அன்று கிழக்கு பள்ளிவாசலில் காலை 08:30 மணிக்கு பெருநாள் தொழுகை மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.இதில் பெருந்திரளான நமதூர் பெருமக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்....

நோன்பு பெருநாள் தொழுகை-தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத்

நோன்பு பெருநாள் தொழுகை-தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத்

தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத்  சார்பாக பெருநாள் திடல் தொழுகை ஜமாலி நகர் திடலில் காலை 08:00 மணிக்கு நடைபெற்றது. இதில் பெருந்திரளான சகோதர சகோதரிகள் குடும்பத்துடன் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.. அல்ஹம்துலில்லாஹ்

நோன்பு பெருநாள் தொழுகை-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

நோன்பு பெருநாள் தொழுகை-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக பெருநாள் திடல் தொழுகை பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்தைத்திடலில் காலை சரியாக 07:30 மணிக்கு நடைபெற்றது. சகோதரர் மிஷால் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்.. இதில் பெருந்திரளான சகோதர சகோதரிகள் குடும்பத்துடன் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.. அல்ஹம்துலில்லாஹ்…


தீன் இயக்கம் - துபை மகாசபை கூட்டம் அழைப்பு

தீன் இயக்கம்(மேற்கு ஜமாஅத்) - துபை  சார்பாக நோன்பு பெருநாள் மகாசபை கூட்டம்



லெப்பைக்குடிக்காடு தீன் இயக்கம்(மேற்கு ஜமாஅத்) -துபை  சார்பாக நோன்பு பெருநாள் மகாசபை கூட்டம் இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளி கிழமை 24.08.2012 அன்று லாஸ்ட் ஹவர் (LAST HOUR) ரெஸ்டாரெண்ட் அஸர் தொழுகைக்கு பின் நடைபெற இருக்கிறது. இதில் மேற்கு மஹல்லா ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு மஹல்லா செயல்பாடு மற்றும் நமதூர் வளர்ச்சிக்கு தெவையான தங்களின் நலவான ஆலோசனைகள் வழங்க அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 



 

 


Thursday 23 August 2012

செல்போன் காதலில் சீரழியும் பிள்ளைகள்

செல்போன் காதலில் சீரழியும் பிள்ளைகள்

பிள்ளை பெறுவது பெரிதல்ல! அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இன்று நாம் நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புகிறோம்.
காலையில் செல்லும் பிள்ளைகள் மாலையில் திரும்புகின்றனர். தினமும் பள்ளிக்குப் போய் படித்து விட்டு வருகின்றனர் என்று நாம் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

புகை நமக்கு பகை

புகை நமக்கு பகை

 

Followers