pages

Friday, 20 September 2013

செல்போன் கதிர்வீச்சு யாருக்கு எதிரி?


சிட்டுக்குருவிகள் ஏன் குறைந்து விட்டன? எங்கள் காலத்தில் சிட்டுக்குருவிகள் வீட்டிலேயே கூடி கட்டி அமோகமாக இனப்பெருக்கம் செய்துள்ளன. இன்றைக்குச் சிட்டுக்குருவிகளைப் பார்க்கவே முடியவில்லையே. இதற்குக் காரணம் செல்போன் கதிர்வீச்சுதான்...

Friday, 5 July 2013

குன்னத்தில் பாதிக்கப்பட்ட நமதூர் சகோதரர்கள் போராட்டம்

கடந்த 29-07-13 சனிக்கிழமை அன்று குன்னம் தாசில்தார் அலுவலகம் முன்பு காயிதே மில்லத் நகரைச் (ஆத்துக்கொள்ளை) சேர்ந்த நமதூர் சகோதரர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.
இப்போராட்டத்தில் மனித வாழ்வு உரிமைகள் கழக மாநிலத் தலைவர் சட்ட ஆலோசகர் சகோ. கோ.கணேசன் கலந்துக்கொண்டு ஆலோசனை வழங்கினார்.

Wednesday, 23 January 2013

இஸ்லாமிய அப்பாவி பொது மக்கள் சுமார் 70 பேர் கைது ! காவி கும்பலுக்கு துணை போகும் காவல்(காவி)துறை?

வி.களத்தூரில் இஸ்லாமிய அப்பாவி பொது மக்கள் சுமார் 70 பேர் கைது ! அவர்களை விடுதலை செய்ய ஜமாத்தார்கள் 28 பேர் வேண்டும் என போலிசாரின் மிரட்டி உள்ளார்கள் .
 
நேற்று இரவு பள்ளிவாசல் வழியாக நடந்த திருமண ஊர்வலத்தில் வாக்குவாதம் நடந்த போது காவி பயங்கரவாத கும்பல் கல்லை எறிந்து, இஸ்லாமியர்கள் அடித்தும் அட்டகாசம் செய்தது காவி பயங்கரவாத கும்பல். இதில் காயம் அடைந்த இஸ்லாமியா்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
 
இஸ்லாமிய அப்பாவி பொது மக்கள் சுமார் 70 பேர் கைது :
இஸ்லாமிய அப்பாவி பொது மக்கள் சுமார் 70 பேர் கைது செய்து வைத்துள்ளர் இவர்கள் காலை பஜிர் தொழுகைக்கு சென்றவர்கள் மற்றும் கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் வைத்துக்கொண்டு போலிசார் மிரட்டிவருவதாக தெரிகிறது.
 
போலிசார் மிரட்டல் :
அப்பாவி பொது மக்களை விடுதலை செய்ய ஜமாத்தார்கள் 28 பேர் வேண்டும் நிபந்தனையை வைத்துள்ளனர். ஆனால் இந்த 28 பேர் கைது செய்யவேண்டும் யார் யார் கைது செய்ய வேண்டும் என காவி பயங்கரவாத கும்பல் கொடுத்துள்ளதாக தகவல் தெரிகிறது.
ஆனால் இஸ்லாமியர்களை அடித்து கல்லை எறிந்து பிரச்சனையை செய்த காவி பயங்கரவாத கும்பலைச் சேர்ந்த  5 பேர் மட்டும் கைது செய்துள்ளனர்.
 
இஸ்லாமியா் கண்டதும் கைது :
இன்று காலை கண்ணில் பட்ட இஸ்லாமியா்கள் கைது, ஆனால் பிரச்சனைக்கு காரணமானவர்கள் வழக்கம் போல் (இந்துகள்) வெளியில் வருகிறார்கள். அவர்களை வி்ட்டுவிட்டு இஸ்லாமியர்களை மட்டும் கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.
 
நன்றி: vkalathur.com

V.களத்தூரில் பதற்றம் - காவல் துறையின் அடாவடித்தனம்

வி.களத்தூரில் நேற்று இரவு (22-01-2013)முதல் திடீர் பதட்டம் நிலவியது . இஸ்லாமியர்கள் வாழும் தெருவில் ( பிரச்சனைச் செய்யும் நோக்கத்துடன் ) மேலதாளத்துடன் திருமண விழா என்ற பெயரில் தெருவுகளில் உள்ளே ஊர்வலம் வந்தனர், இதை அறிந்த இஸ்லாமியர்கள் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை பள்ளிவாசல் வழியாக எந்த வித ஊர்வளம் நடத்தமாட்டோம் என்று கூறிவிட்டு திருமணம் விழா என்ற பெயரில் தெருவுகளில் ஊர்வலம் வந்ததை கண்டித்தனர். நியாயம் கேட்டனர்.
அப்போது பேசிக்கொண்டு இருக்கும் போது மாடியில் இருந்து கல்லை எறிந்து உள்ளனர் ( இவர்கள் திட்டமிட்டு ஊர்வலம் நடத்தி மத மோதலை உருவாக்க மாடியில் கல்லை பதுக்கி வைத்துள்ளனர் என தகவல் வருகிறது), இதில் இஸ்லாமிய சகோதர்கள் சிலர் காயம் அடைந்துள்ளனர் மற்றும் சில இஸ்லாமிய சகோதரர்களை அடித்துள்ளனர்.
 
இதில் காயம் அடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
 
பஜிர் தொழுகையைக்கும், கல்லூரிக்கு சென்றவர்கள் கைது ?
 
இதை அடுத்து இன்று அதிகாலை பஜிர் தொழுகைக்கு சென்றவர்களை கைது செய்துள்ளதாக தெரிகிறது.
இஸ்லாமியர்கள் மீது நாங்கள் FIR போடவேண்டும் ஆகையால் கைது செய்துள்ளேம் என போலீஸ் கூறியதாக தெரிகிறது.
கல்லூரிக்கு சென்றவர்களும் கைது செய்ததாக ஒரு தகவல் பரவுகிறது ?
 
நன்றி : vkalathur.com