pages

Friday, 26 October 2012

பெருநாள் தொழுகை - துபை


அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள தேரா ஈத்கா திடலில் மக்கள்  தியாக திருநாளான ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகையை தொழுதனர்.

காலை 6:00 மணி முதலே பொதுமக்கள் ஈத்கா திடலை நோக்கி அலை அலையாக திரள  தொடங்கினர்.  சரியாக காலை 6:45 மணியளவில் தொழுகை ஆரம்பித்தது. தொழுகை முடிந்ததும் குத்பா பேருரை நடைபெற்றது. இறுதியாக மக்கள் ஒருவரை ஒருவர் சகோதரப் பாசத்துடன் கட்டித் தழுவி ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

பெண்களும் தொழுகையில் கலந்து கொண்டு தங்களுக்குள் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்.
பல்வேறு நாட்டை சார்ந்த மக்கள்   சகோதரத்துடன் கலந்துக்கொண்டது அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
 
எல்லாப் புகழும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே! 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது