pages

Tuesday, 23 October 2012

வேறு நாளில் கலந்தாய்வு , SDPI கோரிக்கைக்கு பல்கலைகழக நிர்வாகம் பதில்

பக்ரித் பெருநாள் தினத்தில் பி.எட் கலந்தாய்வு நடத்த திட்டமிட்டு இருந்ததை தள்ளிவைக்க வலியுறுத்தி SDPI மாநில தலைவர் K K S M தெஹ்லான் பாகவி தமிழக முதல்வர் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோருக்கு பேக்ஸ் மூலம் கோரிக்கை விடுத்தார்.
 
இது சம்பந்தமாக SDPI தலைமையகத்தை தொடர்பு கொண்டு பேசிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி துரையின் துணை இயக்குனர் ரவிச்சந்திரன் ,நாங்கள் கலந்தாய்வு தேதியை முடிவு செய்யும் போது காலண்டரை பார்த்து தான் முடிவு செய்தோம் ,காலண்டரில் 26 ஆம் தேதி என்று தான் போடப்பட்டு இருந்தது.
தற்போது எல்லோருக்கும் அறிவித்துள்ளோம் மாணவர்கள் மீண்டும் 26 ஆம் தேதி தான் கல்லூரிக்கு வருவார்கள் அப்போது அவர்களிடம் கலந்து பேசி 27 ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் பங்கு கொள்ள முடியாத மாணவர்கள் வேறு தேதியில் கலந்தாய்வு நடத்த ஏற்ப்பாடு செய்கிறோம் என தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது