pages

Wednesday, 7 November 2012

போலி பெயர், முகவரி கொடுத்து சிம் கார்டு வாங்கினால்

போலி ஆவணங்களை கொடுத்து சிம் கார்டுகளை பெறுபவர்களை தடுக்கும் வகையில், தொலை தொடர்புத்துறை கடுமையான புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர் வழங்கும் தவறான தகவல்களுக்கு சிம் கார்டு விற்பனையாளர்களே பொறுப்பாவார்கள்.

புதிய விதியின்படி, சிம் கார்டை விற்கும் அங்கீகாரம் பெற்ற முகவர் வாடிக்கையாளர் வழங்கும் விண்ணப்பத்தில் ஒட்டப்பட்டுள்ள புகைப்படத்தை
ஒப்பிட்டுப் பார்த்து சரியானவருக்குதான் சிம் வழங்கப்பட்டுள்ளது என்பதையும், ஆவணங்களை அசலுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவையும் சரியானவை என்பதையும் உறுதி செய்து கையெழுத்து இட வேண்டும். அந்த ஆவணங்கள் போலியானவை எனத் தெரிந்தால் அவர்களே போலீஸில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கச் செய்யலாம். இந்த நடைமுறை வரும் 9ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது