pages

Wednesday, 3 October 2012

மழை காலத்தில் வாகன பராமரிப்பு

மழை பெய்யும் இரவுகளில் லோ-பீம் முகப்பு விளக்கில், வாகனத்தை மெதுவாக இயக்க வேண்டும். ஹை-பீமில் முகப்பு விளக்கை எரியவிட்டால் ஈரமான சாலையில் ஒளி பட்டு எதிரொலிக்கும். தெளிவான பாதை தென்படாது.

எச்ஐடி (ஹை இன்டென்சிட்டி டிஸ்சார்ஜ் லேம்ப்) பல்பு பயன்படுத்துவதால் எதிரே வரும் ஓட்டுனருக்கு பெரிய அளவில் இழப்பு எதுவும் ஏற்படுவது இல்லை. எந்த வகை லேம்ப் பயன்படுத்தினாலும் லோ-பீம் போட்டு செல்வது நல்லது.
இரவு நேர பயணத்தின்போது முடிந்த அளவு முகப்பு விளக்கை லோ-பீமில் பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும். எதிரே வருகிறவர் ஹை-பீமில் முகப்பு விளக்கை எரியவிட்டிபடி வந்தாலும் இடதுபுறமாக உங்களால் திறமையாக, பாதுகாப்பாக வாகனத்தை இயக்க இயலும்.

இரவு பயணம் செய்கிறோம் என்றால், முன்கூட்டியே ஹெட்லைட் மற்றும் டெயில் லேம்ப் நல்லபடியாக எரிகிறதா என்பதை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

எப்போதும் ஆயில் லெவல் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். வாகனத்தில் ஆயில் சிந்துகிறதா என்பதை கவனிக்க வேண்டும். வின்ட் ஷீல்டு கண்ணாடியும், ரியர் வியூக்கள் சுத்தமாக உள்ளதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

காரை நிறுத்தும் இடத்தை முன்கூட்டியே கனித்துவிடுங்கள். மெதுவாக ஓரம்கட்டி, லேசாக பிரேக் அழுத்தம் கொடுத்து நிறுத்தலாம்.

நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும்போது மாற்று டிரைவர் இல்லையென்றால் வாகனத்தை ரோட்டை விட்டு விலக்கி நிறுத்திவிட்டு சிறிது நேரம் தூங்கி எழுந்துவிட்டு, பிறகு வாகனத்தை இயக்கலாம். இது, எல்லோருக்கும் நல்லது. முடிந்த அளவு இரவு பயணத்தை தவிர்ப்பது நல்லது. நாளை காலையில் வேலைக்கு செல்ல வேண்டுமே என்ற அவசரத்தில், பதற்றத்தில் இரவில் காரை இயக்கக்கூடாது.

டேஷ் போர்டை ஒருமுறைக்கு பலமுறை பரிசோதிக்க வேண்டும். வார்னிங் லைட் ஏதாவது பளிச்..சிடுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். வைப்பர் நன்றாக உள்ளதா என்தை முக்கியமாக கவனிக்க வேண்டும்.

வாரம் ஒருமுறை பேனட்டை திறந்து பார்க்க வேண்டும். ஆயில், ஃப்ளுயிட் லெவல் மற்றும் பெல்ட்டுகளை பரிசோதிக்க வேண்டும். எங்கேயாவது கசிவு தென்பட்டால் உடனே சர்வீஸ் சென்டருக்கு கொண்டுசெல்ல வேண்டும்.

நெடுஞ்சாலையில் சீரான வேகத்தில் செல்லும்போது, லைன் மாற நேரிட்டால் இடதோ, வலதோ திரும்பும்போது கண்டிப்பாக இன்டிகேட்டரை ஒளிர செய்ய வேண்டும்.

சிக்னலில் நிற்கும்போது நேராக செல்லவேண்டுமென்றால் இரண்டு இன்டிகேட்டரையும் ஒளிர செய்ய வேண்டாம். ஹசாடு வார்னிங் கொடுக்கவும், பழுது காரணமாக காரை ரோட்டோரம் நிறுத்தும்போதும் மட்டுமே இரண்டு இன்டிகேட்டரையும் ஒளிர செய்ய வேண்டும்.

முகப்பு விளக்கு பல்பு, வைபர், ஹாரன் உள்ளிட்ட முக்கிய உதிரி பாகங்கள் சிலவற்றை காரில் தயாராக வைத்திருப்பது நல்லது. மழை காலத்தில் வாகன பராமரிப்பு 100 சதவீதம் ரோட்டில் மட்டுமே கவனத்தை வைத்து வாகனத்தை ஓட்ட வேண்டும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது