pages

Wednesday, 3 October 2012

வந்து விட்டால்... கவலையில் மூழ்காதீங்க

வராமல் தடுக்க முதன் முறையாக ஹார்ட் அட்டாக்கில் சிக்கி, மீண்டவர்களுக்கு மார்புவலி ஏற்படும்போது நெஞ்சு பகுதியில் ஒரு பாறாங்கல்லை ஏற்றி வைத்தது போன்றும், நடு மார்பில் எரிச்சல் ஏற்படுவது போன்றும் தெரியும். குளித்துவிட்டு வந்தது போன்று வியர்வையும் ஏற்படும். சிலருக்கு நெஞ்சின் மைய பகுதியில் இருந்து தொடங்கி இடதுகைக்கோ, தொண்டைக்கோ, வலது கைக்கோ அல்லது வயிற்றுக்கோ வலி பரவும்.இவர்களுக்கு முதலில் இ.சி.ஜி. சோதனை செய்யப்படும். அடுத்து ட்ரேட்மில் என்னும் இயந்திரத்தின் மீது நடக்க செய்து இசிஜி சோதனை செய்ய வேண்டும். இதில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிந்து, ஹார்ட்அட்டாக் என்று உறுதி செய்யப்பட்டால் அடுத்தக்கட்ட சோதனைக்கு மருத்துவர் பரிந்துரை செய்வார்.

ஹார்ட்அட்டாக் ஒரு தடவை வந்தவர்கள் உணவு கட்டுப்பாடு அவசியம் கடைபிடிக்க வேண்டும். வயிறு நிறைய இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, அதே அளவு உணவை நான்கு அல்லது ஐந்து தடவைகளில் அரை வயிறு உணவாக சாப்பிடலாம். சர்க்கரை வியாதியையும், உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது ஹார்ட்அட்டாக் உட்பட எல்லா நோய்களில் இருந்தும் நம்மை காப்பாற்றும்.

முறையான உணவு கட்டுப்பாடுகளாலும், வாக்கிங், ஜாகிங், சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சிகளால் உடலை பாதுகாத்து, ஹார்ட்அட்டாக் அபாயத்தில் இருந்து மீளலாம் என்கின்றனர் இதய நோய் சிகிச்சை நிபுணர்கள்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது