‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Saturday, 29 September 2012

இறப்புச் செய்திகள் 29-09-12

கிழக்கு தெற்கு தெரு காட்டுவா சுல்தான் அவர்களின் மகளும் கெங்கவல்லி ஜாஃபர் அவர்களின் மனைவியுமான ரெஜியா பேகம் அவர்கள் இன்று (29-09-12, சனிக்கிழமை கிழமை) மதியம் வஃபாத்தாகி விட்டார்கள்.
 
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன்.
 
அவர்களின் மறுமை வாழ்வின் நற்பேருக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

Wednesday, 26 September 2012

மார்க்க விளக்க பொதுக்கூட்டம் - புது ஆத்தூர் (பெரம்பலூர்)

பெரம்பலூருக்கு அருகில் உள்ள புதுஆத்துரில் வருகின்ற 01-10-12 திங்கள் கிழமை  மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
போஸ்டர்

நமதூரில் மழைத் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நமதூரில் 24.09.12 திங்கள் கிழமை காலை 06:30 மணிக்கு ஜமாலி  நகரில்  பூங்காவிற்க்கு  பின்புறம் உள்ள  திடலில் ஏக இறைவனிடம் மழையை வேண்டி  சிறப்பு மழைத் தொழுகை நடைப்பெற்றது.
 
இதில் ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனார்.
 
அல்ஹம்துலில்லாஹ்

Friday, 21 September 2012

மரணமும் - மறுமை சிந்தனையும்

மரணம்!

மரணம் இறைபடைப்பில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. மரணத்திலிருந்து எந்த மனிதரும் தப்பிக்க இயலாது.

கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகிறான்.
‘ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தைச் சுவைக்கக்கூடியதே…! ‘ (அல்குர்ஆன் -(சூரத்துல் அன்பியா)21:35)

‘ஒவ்வோர் சமூகத்துக்கும் (குறிப்பிட்டதொரு) தவணையுண்டு. அவர்களது தவணை வந்துவிட்டால் ஒரு நாழிகையேனும் பிந்தவும் மாட்டார்கள், முந்தவும் மாட்டார்கள் ‘. (அல்குர்ஆன் – (சூரத்துல் யூனுஸ்) 10:49)

அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து பெரம்பலூரில் நடந்த தமுமுக ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் காந்தி சிலை முன்பாக 15-09-2012 சனிக்கிழமை மாலை 5மணியளவில் துவங்கியது. இந்நிகழ்விற்கு மாவட்ட தமுமுக தலைவர் மீரா மொய்தீன் தலைமை தாங்கினார். மாவட்ட ம.ம.க செயலாளர் சுல்தான்மொய்தீன், மாவட்ட தமுமுக செயலாளர் பொறியாளர் ரசீது, கழக பேச்சாளர் திருச்சி ரபீக் ஆகியோர் மிகவும் ஆக்ரோசமாக, அமெரிக்காவை கண்டிக்க இந்திய அரசை வலியுறுத்தியும் கண்டன உரையாற்றினர்.

பெரம்பலூரில் தமுமுக நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம்!


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும்
திருச்சி ரத்னா குளோபல் மருத்துவமனை
இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்..
இம் மருத்துவ முகாமில் மருந்து & ஆப்ரேசன் இலவசமாக செய்யப்படும் .

அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
 
(இன்ஷா அல்லாஹ்),
நாள் :23-09-2012; ஞாயிறு
நேரம் :9.00 am to 3.00 pm,
இடம் : பெரம்பலூர் உழவர் சந்தை திடல்.

ஆன்டிராய்ட் போனில் புதிய தலைமுறை டிவி

புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி ஆரம்பித்த புதிதிலேயே நம்பர் ஒன் செய்தி சேனல் என்ற அந்தஸ்தை பெற்ற ஒன்று.  ஆன்லைன் மூலம் செய்தி தந்த முதல் தமிழ் சேனலும் இதுவே. இப்போது இதனை ஆன்டிராய்ட் போனிலும் பயன்படுத்த இயலும். 

நேரடியாக Google Play தளத்தில் இல்லை. எனவே இந்த இணைப்பு மீது கிளிக் செய்துடவுன்லோட் செய்யவும். 

இஸ்லாத்தின் பார்வையில் நண்பர்கள்

கண்ணியத்திற்குரிய  வல்ல நாயன் அல்லாஹ்  தன் திருமறையில்:

 நம்பிக்கைக் கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவருக் கொருவர் உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையை தடுப்பார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஜகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள் புரிவான். அல்லாஹ் மிகைத்தவன். ஞானமிக்கவன்.  (அல்குர்ஆன்: 9: 71)

தமிழகத்தில் சூரிய ஒளியால் இயங்கும் பள்ளி

அணுவுலை வந்தாதான் மின்சாரம் வரும்னு நம்புற அறிவாளிகளே , திருவண்ணாமலை மாவட்டம் வேடப்பனுர் கிராமத்தில்"அருணாச்சலா வில்லேஜ் ஸ்கூல்" உள்ளது. தமிழகத்திலேயே முதன் முறையாக சோலார் சிஸ்டம் மூலம் இயங்கும் பள்ளி என்ற பெருமை இப்பள்ளிக்கே உண்டு.தேவையான மின்சாரத்தை சூரிய ஒளி மூலமே பெற்றுக் கொள்கிறார்கள் என்பதோடு மட்டுமல்லாமல்,தமிழகத்திலேயே 1 ரூபாய் கூட வாங்காமல் இலவச ஆங்கிலவழிக் கல்வியைத் தரும் தனியார் பள்ளி என்ற பெருமையும் உண்டு.

Wednesday, 19 September 2012

இறப்புச்செய்திகள் 18/09/12

மேற்கு தெற்கு தெரு நடுப்பண்ணை மர்ஹூம் இ.கு.அ.அப்துல் காதிர் அவர்களின் மனைவி பஷீரா கனி அவர்கள் 18-09-12  செவ்வாய்க் கிழமை இரவு 9 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
 
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
  
அவர்களது மஃபிரத்துக்காகவும், மறுமையில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துஆ செய்ய வேண்டுகிறோம்.
 

Tuesday, 18 September 2012

இறப்புச்செய்திகள் 18-09-12

மேற்கு மெயின் ரோடு (NEW WATER TANK அருகில்) அஜ்மியான் (மர்ஹூம்) அப்துல் சத்தார் அவர்களின் மனைவியும், அஜ்மியான் சாஹுல் ஹமீது, செல்வ முஹமது, ஷாஜஹான், கமர்தீன் மற்றும் அலாவுதீன் இவர்களின் தாயாருமாகிய ஹசீனா பீவி அவர்கள் நேற்று (17-09-12, திங்கள் கிழமை) இரவு 11 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
 
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அவர்களின் மறுமை வாழ்வின் நற்பேருக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

இந்த செய்தி அனைத்து மத மற்றும் மத ஈடுபாடு இல்லாதவர்களுக்கும்!!!

"The Hundreds" என்ற நூல் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகியும் யாருக்காவது அது பற்றி தெரியுமா????

ஏனென்றால் அது இஸ்லாத்துடன் தொடர்புடையது!!!

அதுவும் ஒரு கிருஸ்துவர் எழுதியது!!!

இஸ்லாம் வளர்வதை யாராலும் தடுக்க இயலாது!!!

காரணம் அது இறைவனின் மார்க்கம்!!!

உலகில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்திய 100 பேர்

"100 பேர்" நூல் வெளிவந்து 13 ஆண்டுகள் கடந்து விட்டன. (இதன் தமிழ் முதல் பதிப்பு1998). இந்த புத்தகம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்று நாம் கான்பது அதனுடைய தமிழ் மொழிபெயர்ப்பு.

இந்நூல் வரலாற்றிலும் உலகின் போக்கிலும் மிகப்பெரும் விளைவை ஏற்ப்படுத்திய 100 பேர் யார் என்பதைப் பற்றி விவாதிக்கிறது.

24 முஸ்லிம் இயக்கங்கள் சார்பில் "இன்று" அமெரிக்க தூதரக முற்றுகை போராட்டம்!

24 முஸ்லிம் இயக்கங்கள் சார்பில் "இன்று" அமெரிக்க தூதரக முற்றுகை போராட்டம்!
 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதில் பங்கேற்கவில்லை.
 
முஹம்மது நபி அவர்களை இழிவுபடுத்தும் வகையில் சினிமாவை இயற்றிய யூதனை கண்டித்தும் அதற்கு துணை நிற்கும் உலக ரவுடி நாடான அமெரிக்காவை கண்டித்தும் இன்று மாலை 4 மணியளவில்,
அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளது.
உலக முஸ்லிம்கள் அனைவரையும் உலுக்கி கொதித்தெழ வைக்கும் வகையில் அமெரிக்க யூதன் பாசிலி, முஹம்மது நபி அவர்களை இழிவுபடுத்தும் விதத்தில் திரைப்படம் தயாரித்துள்ளான்.

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய சினிமா படத்தை தடை செய்ய வேண்டும்: சீமான்

மாலை மலர் செய்தி                             நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இஸ்லாமிய மக்களால் போற்றுதலுடன் கடைபிடிக்கப்படும் குர் ஆனை அருளிய இறைவனின் தூதர் நபிகள் நாயகத்தை சிறுமைப்படுத்தும் ஒரு திரைப்படத்திற்கு கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் வெளியிட அனுமதி வழங்கியுள்ள அமெரிக்க அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியதாகும்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்ட எதிரொலி: சென்னை அமெரிக்க தூதரக விசா பிரிவு மூடல்

முகம்மது நபியைத் தவறாக சித்தரிப்பதாகக் கூறப்படும் ஆங்கிலத் திரைப்படத்திற்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்வதன் பின்னணியில், சென்னையிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் விசா வழங்கும் பிரிவு இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திங்களும் செவ்வாயும் விசாக்கள் வழங்கப்படமாட்டாது. இவ்விரு நாட்களில் விசா தொடர்பாக விவாதிக்கவென அழைக்கப்பட்டிருந்தவர்களுக்கு புதிய தேதிகள் அறிவிக்கப்படும்.
அமெரிக்க குடிமக்களுக்கு ஏதாவது அவசரத் தேவையிருக்குமானால் அவை கவனிக்கப்படும் என துணைத் தூதரகத்தின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Monday, 17 September 2012

பெரம்பலூரில் அமெரிக்காவை எதிர்த்து போராட்டம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம்

இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம்கள் தமது உயிரினும் மேலாக மதிக்கும் அண்ணல் நபிகள் நாயகத்தையும் இழிவாகச் சித்தரித்து திரைப்படம் எடுத்த சாம் பேசில் என்ற யூத இயக்குனரையும் இந்தப் படத்தை உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கின்ற டெர்ரி ஜோன்ஸ் என்ற பாதிரியையும், இவர்களுக்கு ஆதரவு கொடுத்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கையும் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் சார்பாக பெரம்பலூரில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை போராட்ட காட்சிகள்-பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா


சென்னை போராட்ட காட்சிகள்-தமுமுக


 
 




வேலை வாய்ப்பு - அமீரகம்

Assalamu Alaikum,

Dear Brothers,

Document Controller with experience as a Secretary - urgently required.

Candidate must be here in UAE not outside of the country.

Plesae forward CV of anyone if you know seeking a placement to dilshaddilshad@yahoo.com.

Wassalam

Muhd. Dilshad

Abu Dhabi
+971551355182

சென்னை போராட்ட காட்சிகள்-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

 






24 அமைப்புகள் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னையில் 18-09-12 செவ்வாய் கிழமை அன்று மாலை 4:00 மணிக்கு அமெரிக்க தூதரகம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
 
இதில் மொத்தம் 24 அமைப்புகள் கலந்துக்கொள்கின்றன.
 

Saturday, 15 September 2012

இறப்புச் செய்திகள் 15-09-12

மேற்கு நடுத்தெரு வெண்பாவூர் ஹாஜி V.M. அப்துல் சமது அவர்களது மனைவியும் V.A. முஹம்மது பாரூக் மற்றும் V.A.முஹம்மது நாசர் ஆகியோரின் தாயாருமாகிய  சம்சுல்ஹுதா அவர்கள் இன்று (15-09-12  சனிக்கிழமை) காலையில் வபாத்தாகி விட்டார்கள்.
 
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
 
அன்னாரது ஜனாஸா இன்று (15-09-12 சனிக்கிழமை) மேற்கு ஜாமியா பள்ளியில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்.
 
அவர்களின்  மறுமை  வாழ்வின்  நற்பேருக்காக  எல்லாம்  வல்ல அல்லாஹ்விடம்  துஆ  செய்ய  கேட்டுக்கொள்கிறோம்.

இறப்புச்செய்திகள் 15/09/12

மேற்கு மேற்கு காயிதே மில்லத் நகர் சேலம் (மர்ஹூம்) அப்துல் சலாம் அவர்களின் மகனும், A சஹாப்தீன் (உஸ்தாத்) அவர்களின் தம்பியுமான A சம்சுதீன் அவர்கள் இன்று (15-09-12  சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு வஃபாத்தாகிவிட்டார்கள்.
 
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
 
அன்னாரது மஃபிரத்துக்காகவும், மறு உலகத்தில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துஆ செய்ய வேண்டுகிறோம்.

Friday, 14 September 2012

இறப்புச் செய்திகள்-14/09/2012

மேற்கே காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த (டாக்டர் அப்துல் ஹாதி மருத்துவமனைக்கு பின்புறம்)   கோஸ்கனி (மருக்குடி) மர்ஹீம் எஹசானல்லாஹ்  அவர்களின் மகன் அஹமது உசேன் அவர்கள் இன்று         (14-09-12) மாலை வபாத்தாகி விட்டார்கள்.
 
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
 
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (15-09-12) சனிக்கிழமை காலை 09:00 மணிக்கு மேற்கு கப்ருஸ்தானில் நடைபெறுகிறது.
 
அன்னாரின் மறுமைவாழ்வின் நற்பேருக்காக எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துஆ செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் - TNTJ பெரம்பலூர்

நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை காமுகராகச் சித்தரித்து சினிமா எடுத்துள்ள அமெரிக்க கிறித்தவப் பாதிரியாரையும், அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் பெரம்பலூர் மாவட்டம் சார்பாக இன்ஷா அல்லாஹ் நாளை 15-09-12 சனிக்கிழமை மாலை 4:00 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பெரம்பலூரில் நடைபெற உள்ளது.

 அதற்க்கான சுவர் விளம்பர போஸ்டர்

கண்டன ஆர்ப்பாட்ட நோட்டீஸ் - TNTJ பெரம்பலூர்

நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை காமுகராகச் சித்தரித்து சினிமா எடுத்துள்ள அமெரிக்க கிறித்தவப் பாதிரியாரையும், அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் கண்டித்து  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் பெரம்பலூர் மாவட்டம் சார்பாக இன்ஷா அல்லாஹ்  நாளை 15-09-12 சனிக்கிழமை மாலை 4:00 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பெரம்பலூரில் நடைபெற உள்ளது.
 
அதற்க்கான நோட்டீஸ் விளம்பரம்
 

நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தும் அமெரிக்க திரைப்படம்: அமெரிக்க தூதரகம் முற்றுகை! TNTJ அறிவிப்பு!

நபிகள் நாயகத்தைக் காமூகராகச் சித்தரித்து சினிமா எடுத்துள்ள அமெரிக்க கிறித்தவப் பாதிரியாரையும் அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் கண்டித்து அமெரிக்கத் தூதரகம் முற்றுகை! என்றும் தமிழகம் எங்கும் பரவலாக கண்டன ஆர்ப்பாட்டம நடத்த வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் அறிவித்து இருக்கின்றது.
 
அதன் பொது செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் தனது அறிக்கையில் குறிப்பிடும் போது
சென்னையில் 15-9-2012 சனிக்கிழமை காலை 11 மணிக்கு அமெரிக்க தூதரகம் முற்றுகையாகவும்
 
சென்னை அல்லாத மற்ற பகுதிகளில் மாவட்ட தலைநகரங்களிலும் முக்கிய நகரங்களிலும்
 
கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
 
 
 
இது குறித்து மேலும் விபரம் அறிய

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி அமெரிக்க யூதன் தயாரித்துள்ள திரைப்படம் - உலகம் முழுவதும் முஸ்லிம்கள் கொந்தளிப்பு!

அமெரிக்கா நாட்டின் கலிபோனியா மகானத்தை சேர்ந்த சாம் பாசைல் என்ற அயோக்கியன் நபிகள் நாயகத்தை மிகவும் இழிவு படுத்தி திரைப்படம் தயாரித்து அதன் 14 நிமிட முன்னோட்ட காட்சிகளை கடந்த ஜுலை மாதம் Youtube ல் வெளியிட்டுள்ளான்.
இவன் ஒரு இஸ்ரேலிய யூத இனத்தை சேர்ந்தவன். இந்த படத்தை வேண்டுமென்றே இஸ்லாத்திற்கு எதிரான யூத அமைப்பு ஒன்று அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் முழுவதும் விளம்பரம் செய்ய ஆரம்பித்தது.

Thursday, 13 September 2012

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்தை தடைசெய்யக்கோரி சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை - தமுமுக

 

கூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்

இஸ்லாம் என்பது புற வாழ்க்கையிலும் அக வாழ்க்கையிலும் ஒழுக்க மாண்புகளைக் கற்றுத் தரக் கூடிய மார்க்கமாகும்.

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வை சொர்க்கத்திற்குரிய வாழ்வாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவனுடைய வெளிப்புற வாழ்க்கை மட்டுமல்லாது தன்னுடைய சுற்றத்தினரோடு கலந்து வாழ்கின்ற வாழ்க்கையையும் ஒழுக்கமான வாழ்க்கையாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

வி.களத்தூர் துவக்கப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

வேப்பந்தட்டை அருகே உள்ள வி.களத்தூர் அரசு துவக்கப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது. பெரம்பலூர் ஸ்டேட் வங்கி சமுதாய சேவை பிரிவு சார்பில் வேப்பந்தட்டை அருகே உள்ள வி.களத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் விழா நடந்தது. கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் தென்றல் தலைமை வகித்தார். ஊராட்சி துணைத்தலைவர் ஜமால்முகமது, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுந்தரராஜன் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் ராஜகோபால் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கினார். வேளாண்மை வளர்ச்சி பிரிவு மேலாளர் நாகராஜன், வளர்ச்சி பிரிவு மேலாளர் காசிராஜ்குமார் ஆகியோர் வாழ்த்தினர். அன்னமங்கலம் சிஎஸ்ஐ தலைமை ஆசிரியர் ஆண்ட்ரூஸ், அ.மேட்டூர் பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகாபீவி வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் பெரியஅரசன்பாரதி நன்றி கூறினார்.

Wednesday, 12 September 2012

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா-ஆகஸ்ட் மாத நிவாரண பணிகள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக ஆகஸ்ட் மாதம் செய்த நிவாரண பணிகள்
முஸ்லிம் சமூகத்தில் பின்தங்கி இருக்கும் மக்களை வலிமைப்படுத்துவதேயே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் சமூக பேரியக்கமே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. இதன் ஒரு அங்கமாக சமூகத்தை அனைத்து துறைகளிலும் சக்திபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டுத் துறையின் மூலமாக பல பணிகளை செய்து வருகிறது.

TNTJ லெப்பைக்குடிக்காடு கிளை-புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளையின் மாதாந்திர பொதுக்குழு 09/09/2012 ஞாயிற்றுக்கிழமையன்று மதியம் 03:00 மணியளவில் கிளையின் மர்கஸில் மாவட்ட தலைவர் அஸ்ரப் அலி அவர்களின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட பேச்சாளர் மைனுதீன் அவர்கள் நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள் பற்றி எடுத்துரைத்தார். அமீரக லெப்பைக்குடிக்காடு ஊர் கூட்டமைப்பின் பொறுப்பாளர் சகோ முஹைய்யத்தீன் பாதுஷா அவர்கள் நாம் ஏன் இந்த ஜமாஅத்தில் இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைத்தார்.
 
இதில் கீழ்க்கண்ட நபர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 
தலைவர் : பம்பாய் A.அப்துல் நாசர்                        9791203451, 9442924065
துணை தலைவர் A.E.அஹமது இஸ்மாயில்        9442662960
செயலாளர் குரோஜா A.ஷேக் ராஷித்                      8973845996
துணை செயலாளர் பாபுல் ஹூசைன்                    9942098849
பொருளாளர் வாவாராவுத்தர் F.ஹபிபுல்லாஹ்    9791917344
இதில் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.


நன்றி
www.labbaikudikadutntj.com

 

TNTJ பெரம்பலூர் மாவட்ட செயற்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம்09/09/2012 ஞாயிற்றுக்கிழமையன்று லெப்பைக்குடிக்காடு கிளை தவ்ஹீத் மர்கஸில் காலை10:30 மணியளவில் மாவட்ட தலைவர் அஸ்ரப் அலி அவர்களின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றது. இதில்,
1. மாவட்ட மற்றும் கிளைகளின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டது.
2. ஃபித்ரா கணக்குகள் வாசிக்கப்பட்டது.
3.ஜூலை, ஆகஸ்ட் மாத செயல்பாடுகள் கிளை வாரியாக வாசிக்கப்பட்டது.

Monday, 10 September 2012

பெரம்பலூர் மாவட்ட சிறப்பு கிராம சபைக்கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளில், செப். 12-ம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது என்றார்.                          இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2012-13-ம் ஆண்டுக்கு நில அபிவிருத்திப் பணிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களில் பணிகள் மேற்கொள்வதற்கு விவசாயிகள் பட்டியல் வைக்கப்பட்டு அங்கீகாரம் பெறுதல். தேசிய கால் மற்றும் வாய் நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் வரும் 15-ம் தேதி முதல் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல் மற்றும் 19-வது கால்நடை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானிக்கப்பட உள்ளது.

கலர் கலராய் உணவுகள்! உடல் நலத்தில் கவனம் தேவை!

சிறிய மிட்டாய் தொடங்கி ஸ்டார் ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் சிக்கன் வரை கண்ணைக் கவரும் கலராய் இருந்தால்தான் கவனம் ஈர்க்கிறது. அந்த நிறத்தின் அழகில் மயங்கி அதை வாங்கி உட்கொள்பவருக்கு உடல்ரீதியான குடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், ஸ்வீட், ஜாம், கேக் வகைகள் பிஸ்கெட்டுகள், ரோஸ்மில்க் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் குழந்தை உணவுகள், கேசரி போன்றவற்றில் அளவுக்கு அதிகம் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இந்த ரசாயனங்கள் பெரும்பாலும் நிலக்கரி தாரிலிருந்தும், பெட்ரோலில் இருந்தும் பிரித்து எடுக்கப்பட்டு உணவு பொருட்களில் சேர்க்கப்படுகின்றன.

TNTJ லெப்பைக்குடிக்காடு - துபை அமர்வு

 ஏக நாயன் அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லெப்பைக்குடிக்காடு ஊர் கூட்டமைப்பின் வழமையான மாதாந்திர அமர்வின் செப்டம்பர் மாத அமர்வு 07/09/2012 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப்பின் 07:00 மணி முதல் இஷா வரை துபை மண்டல தலைமை மர்கஸில் நடைப்பெற்றது.
இதில் ஏராளமான தவ்ஹீத் கொள்கைச் சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சகோதரர் T.M.பஷீர் அஹம்மது அவர்களுடைய துவக்க உரையுடன் அமர்வு துவங்கியது.

Monday, 3 September 2012

துபை மண்டல இரத்த தான முகாம்

துபை மண்டல இரத்த தான முகாம் : 113 நபர்கள் இரத்த தானம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் மற்றும் லத்திபா மருத்துவமனை இனைந்து நடத்திய மாபெரும் இரத்த தான முகாம் 31.08.2012 அன்று மண்டல தலைவர் மெளலவி.முஹம்மது நாசிர் MISC அவர்களின் தலைமையிலும் செயலாளர் சகோ.அபுதாஹிர் அவர்களின் முன்னிலையில் நடைப்பெற்றது.
சரியாக காலை 8 மணியளவில் முகாம் ஆரம்பித்தது. வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை விடுமுறையாக இருந்தாலும் காலையிலே சகோதரர்கள் சாரை சாரையாக மருத்துவமனையை நோக்கி வர தொடங்கினர்.
 
இந்த முகாமில் பிற மத சகோதரர்கள் உள்பட மொத்தம் 113 சகோதரர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். இதில் தேய்ரா, பர்துபை, அல்கூஸ், ஜெபல் அலி, ஹோர் அல் அன்ஸ், கிஸஸ், சோனாப்பூர், சத்வா ஆகிய கிளைலிருந்து சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
 
இதில் நமதூர் லெப்பைக்குடிக்காடு சகோதரர்கள் பலர் கலந்துக்கொண்டு இரத்ததானம் செய்தனர்.


புதிய தீன் இயக்க நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்

புதிதாக  தேர்ந்தெடுக்கபட்ட தீன் இயக்க நிர்வாகிகளுக்கு எங்கள் (லெப்பைக்குடிக்காடு டுடே- LABBAIKUDIKADU TODAY) செய்திக்குழுமம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
 
புதிய நிர்வாகம் பல இளைஞர்களை கொண்டுள்ளதால் புத்துணர்ச்சிப் பெற்று நமதூர் முன்னேற்றத்திற்கு சிறப்பாக பாடுபட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம்.
 
 புதிய நிர்வாகிகள் முழு பட்டியல் காண்க


Sunday, 2 September 2012

இறப்புச்செய்திகள்-01/09/2012

நமதூர் கிழக்கு, அரபாத் நகரைச் சேர்ந்த புதுக்குடி அப்துல் ரஜ்ஜாக் அவர்களின் இளைய மகனும், புதுக்குடி முஹைய்யத்தீன் பாஷா (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல அழைப்பாளர் மற்றும் லெப்பைக்குடிக்காடு பொறுப்பாளர்)   அவர்களின் தம்பியுமான பாபு என்கிற இப்ராஹிம் பாஷா அவர்கள் இன்று (01/09/2012 சனிக்கிழமை) காலை 09:00 மணியளவில் துபையில் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் உடல் நமதூருக்கு கொண்டுச்சென்று நமதூரில் நல்லடக்கம் செய்ய உள்ளது.

அன்னாரின் மஃபிரத்துக்காகவும், மறு உலகில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துஆ செய்ய வேண்டுகிறோம்..

தகவல்:-   http://www.labbaikudikadutntj.com/

Followers