‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Thursday, 13 September 2012

வி.களத்தூர் துவக்கப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

வேப்பந்தட்டை அருகே உள்ள வி.களத்தூர் அரசு துவக்கப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது. பெரம்பலூர் ஸ்டேட் வங்கி சமுதாய சேவை பிரிவு சார்பில் வேப்பந்தட்டை அருகே உள்ள வி.களத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் விழா நடந்தது. கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் தென்றல் தலைமை வகித்தார். ஊராட்சி துணைத்தலைவர் ஜமால்முகமது, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுந்தரராஜன் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் ராஜகோபால் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கினார். வேளாண்மை வளர்ச்சி பிரிவு மேலாளர் நாகராஜன், வளர்ச்சி பிரிவு மேலாளர் காசிராஜ்குமார் ஆகியோர் வாழ்த்தினர். அன்னமங்கலம் சிஎஸ்ஐ தலைமை ஆசிரியர் ஆண்ட்ரூஸ், அ.மேட்டூர் பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகாபீவி வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் பெரியஅரசன்பாரதி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது

Followers