LABBAIKUDIKADU TODAY
ஏக இறைவனின் திருப்பெயரால்….
Friday, 20 September 2013
Friday, 16 August 2013
Friday, 5 July 2013
Wednesday, 23 January 2013
இஸ்லாமிய அப்பாவி பொது மக்கள் சுமார் 70 பேர் கைது ! காவி கும்பலுக்கு துணை போகும் காவல்(காவி)துறை?
வி.களத்தூரில் இஸ்லாமிய அப்பாவி பொது மக்கள் சுமார் 70 பேர் கைது ! அவர்களை விடுதலை செய்ய ஜமாத்தார்கள் 28 பேர் வேண்டும் என போலிசாரின் மிரட்டி உள்ளார்கள் .
நேற்று இரவு பள்ளிவாசல் வழியாக நடந்த திருமண ஊர்வலத்தில் வாக்குவாதம் நடந்த போது காவி பயங்கரவாத கும்பல் கல்லை எறிந்து, இஸ்லாமியர்கள் அடித்தும் அட்டகாசம் செய்தது காவி பயங்கரவாத கும்பல். இதில் காயம் அடைந்த இஸ்லாமியா்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
இஸ்லாமிய அப்பாவி பொது மக்கள் சுமார் 70 பேர் கைது :
இஸ்லாமிய அப்பாவி பொது மக்கள் சுமார் 70 பேர் கைது செய்து வைத்துள்ளர் இவர்கள் காலை பஜிர் தொழுகைக்கு சென்றவர்கள் மற்றும் கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் வைத்துக்கொண்டு போலிசார் மிரட்டிவருவதாக தெரிகிறது.
போலிசார் மிரட்டல் :
அப்பாவி பொது மக்களை விடுதலை செய்ய ஜமாத்தார்கள் 28 பேர் வேண்டும் நிபந்தனையை வைத்துள்ளனர். ஆனால் இந்த 28 பேர் கைது செய்யவேண்டும் யார் யார் கைது செய்ய வேண்டும் என காவி பயங்கரவாத கும்பல் கொடுத்துள்ளதாக தகவல் தெரிகிறது.
ஆனால் இஸ்லாமியர்களை அடித்து கல்லை எறிந்து பிரச்சனையை செய்த காவி பயங்கரவாத கும்பலைச் சேர்ந்த 5 பேர் மட்டும் கைது செய்துள்ளனர்.
இஸ்லாமியா் கண்டதும் கைது :
இன்று காலை கண்ணில் பட்ட இஸ்லாமியா்கள் கைது, ஆனால் பிரச்சனைக்கு காரணமானவர்கள் வழக்கம் போல் (இந்துகள்) வெளியில் வருகிறார்கள். அவர்களை வி்ட்டுவிட்டு இஸ்லாமியர்களை மட்டும் கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.
நன்றி: vkalathur.com
V.களத்தூரில் பதற்றம் - காவல் துறையின் அடாவடித்தனம்
வி.களத்தூரில் நேற்று இரவு (22-01-2013)முதல் திடீர் பதட்டம் நிலவியது . இஸ்லாமியர்கள் வாழும் தெருவில் ( பிரச்சனைச் செய்யும் நோக்கத்துடன் ) மேலதாளத்துடன் திருமண விழா என்ற பெயரில் தெருவுகளில் உள்ளே ஊர்வலம் வந்தனர், இதை அறிந்த இஸ்லாமியர்கள் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை பள்ளிவாசல் வழியாக எந்த வித ஊர்வளம் நடத்தமாட்டோம் என்று கூறிவிட்டு திருமணம் விழா என்ற பெயரில் தெருவுகளில் ஊர்வலம் வந்ததை கண்டித்தனர். நியாயம் கேட்டனர்.
அப்போது பேசிக்கொண்டு இருக்கும் போது மாடியில் இருந்து கல்லை எறிந்து உள்ளனர் ( இவர்கள் திட்டமிட்டு ஊர்வலம் நடத்தி மத மோதலை உருவாக்க மாடியில் கல்லை பதுக்கி வைத்துள்ளனர் என தகவல் வருகிறது), இதில் இஸ்லாமிய சகோதர்கள் சிலர் காயம் அடைந்துள்ளனர் மற்றும் சில இஸ்லாமிய சகோதரர்களை அடித்துள்ளனர்.
இதில் காயம் அடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பஜிர் தொழுகையைக்கும், கல்லூரிக்கு சென்றவர்கள் கைது ?
இதை அடுத்து இன்று அதிகாலை பஜிர் தொழுகைக்கு சென்றவர்களை கைது செய்துள்ளதாக தெரிகிறது.
இஸ்லாமியர்கள் மீது நாங்கள் FIR போடவேண்டும் ஆகையால் கைது செய்துள்ளேம் என போலீஸ் கூறியதாக தெரிகிறது.
இஸ்லாமியர்கள் மீது நாங்கள் FIR போடவேண்டும் ஆகையால் கைது செய்துள்ளேம் என போலீஸ் கூறியதாக தெரிகிறது.
கல்லூரிக்கு சென்றவர்களும் கைது செய்ததாக ஒரு தகவல் பரவுகிறது ?
நன்றி : vkalathur.com
Thursday, 20 December 2012
நமதூரில் நாளை (21ம் தேதி வெள்ளிக்கிழமை) மின் தடை

இதுகுறித்து லப்பைக்குடிக்காடு உதவி செயற்பொறியாளர் சுகுமாரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மங்களமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 21ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. எனவே, இங்கிருந்து மின்வினியோகம் பெறும் வாலிகண்டபுரம், தேவையூர், மங்களமேடு, வி.களத்தூர், டி.கீரனூர், பெருமத்தூர், குன்னம், வரகூர், மூங்கில்பாடி, பரவாய், நன்னை, வேப்பூர், எழுமூர், அயன் பேரையூர், சின்னாறு, எறையூர், திருமாந்துறை, லப்பைக்குடிக்காடு, சு.ஆடுதுறை, அந்தூர், ஒகளூர், கல்லம்புதூர், சின்ன வெண்மணி, பெரியம்மாபாளையம், சொக்கநாதபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் அன்று காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது.
மார்க்க விளக்க பிரச்சாரம்
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 21-12-12 வெள்ளிக்கிழமை மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு 6.30 மணிக்கு மேற்கு தெற்குத் தெருவில் உள்ள சகோ.வெண்பாவூர் தாவூத் அலி அவர்கள் வீட்டருகில் ”இறை அச்சம்” என்ற தலைப்பில் இமாம். முஹம்மது சித்தீக் அவர்கள் உரையாற்ற உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் சகோதர,சகோதரிகள் அனைவரும் கலந்து கொண்டு இம்மையிலும் மறுமையிலும் வெற்றியடையுமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லெப்பைக்குடிக்காடு(கிளை) சார்பாக அன்போடு கேட்டுக்கெள்கின்றோம்.
இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
லெப்பைக்குடிக்காடு கிளை
மின்னஞ்சல் தகவல்
சகோ.ஷேக் ராசித்
அமீரக வாழ் V.களத்தூர் தவ்ஹீத் சகோதரர்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம்

தொடர்புக்கு
ஷாகுல் ஹமீத் - 0501810114
குத்புல் ஆலம் - 0557718669
அன்புடன் அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அமீரக V.களத்தூர் ஒருங்கிணைப்புக் குழு
பெரம்பலூர் மாவட்டம்
Sunday, 25 November 2012
இறப்புச்செய்திகள் - 25/11/12
மேற்கு காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்த தோலி (மர்ஹூம்) ஹாஜா மொய்தீன் அவர்களின் மகனும் தோலி முஹம்மது இஸ்மாயில் மற்றும் ஜாஹீர் ஹுசைன் ஆகியோரின் தந்தையுமான முஹம்மது இப்ராஹீம் அவர்கள் இன்று (25-11-12, ஞாயிற்றுக்கிழமை) மதியம் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அவர்களது ஜனாஸா நாளை (26.11.2012, திங்கட்கிழமை) காலை மேற்கு பள்ளிவாசலில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.
அவர்களின் மறு உலகின் நற்பேருக்காக எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துஆ செய்ய கேட்டுக்கொள்கிறோம்.
Subscribe to:
Posts (Atom)