துபை மண்டல இரத்த தான முகாம் : 113 நபர்கள் இரத்த தானம்

சரியாக காலை 8 மணியளவில் முகாம் ஆரம்பித்தது. வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை விடுமுறையாக இருந்தாலும் காலையிலே சகோதரர்கள் சாரை சாரையாக மருத்துவமனையை நோக்கி வர தொடங்கினர்.
இந்த முகாமில் பிற மத சகோதரர்கள் உள்பட மொத்தம் 113 சகோதரர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். இதில் தேய்ரா, பர்துபை, அல்கூஸ், ஜெபல் அலி, ஹோர் அல் அன்ஸ், கிஸஸ், சோனாப்பூர், சத்வா ஆகிய கிளைலிருந்து சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் நமதூர் லெப்பைக்குடிக்காடு சகோதரர்கள் பலர் கலந்துக்கொண்டு இரத்ததானம் செய்தனர்.
இனை செயலாளர் சகோ.முஹம்மது இபுராஹிம் அவர்களின் தலைமையில் தொண்டரணியினர் சிறப்பாக களப்பணியாற்றினர்.
எல்லாம் புகழும் நம்மை படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே!
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது