‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Monday 10 September 2012

TNTJ லெப்பைக்குடிக்காடு - துபை அமர்வு

 ஏக நாயன் அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லெப்பைக்குடிக்காடு ஊர் கூட்டமைப்பின் வழமையான மாதாந்திர அமர்வின் செப்டம்பர் மாத அமர்வு 07/09/2012 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப்பின் 07:00 மணி முதல் இஷா வரை துபை மண்டல தலைமை மர்கஸில் நடைப்பெற்றது.
இதில் ஏராளமான தவ்ஹீத் கொள்கைச் சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சகோதரர் T.M.பஷீர் அஹம்மது அவர்களுடைய துவக்க உரையுடன் அமர்வு துவங்கியது.
அதைத் தொடர்ந்து இறை நினைவூட்டலான மார்க்க பயான் செய்யப்பட்டது.
சகோதரர் T.M.பஷீர் அஹம்மது அவர்கள் மரணம் தரும் படிப்பினை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இதில் மனிதனுக்கு மரணத்தின்போது ஏற்படும் வேதனைப் பற்றியும், மரணத்திற்க்குப் பிறகு கப்ரின் நிலை மற்றும் கப்ரின் வேதனை குறித்தும் சிறப்பான ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார்கள். இந்த பயான் இன்றைய சூழ்நிலைக்கு தகுந்ததாகவும்,மரண பயமின்றி உலகமாயையில் மூழ்கிகிடப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும் அமைந்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஒரு மாத கால செயல்பாட்டு அறிக்கையை ஊர் கூட்டமைப்பின் பொருப்பாளர்களால் வாசிக்கப்பட்டது.
இதில் தாயகத்தில் நடைப்பெற்ற காரியங்கள், ஜூம்ஆ உரை, தெருமுனைப் பிரச்சாரம், வாராந்திர நோட்டீஸ், தர்பியாக்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் விபரங்கள்,மாவட்ட செயல்பாடுகள், மாவட்டத்தின் பிறகிளைகளின் செயல்பாடுகள், சமுதாய நிகழ்வுகள் அனைத்தும் அமர்வில் தொகுத்து வாசிக்கப்பட்டன.
ரமளானின் செயல்பாடுகள் பற்றியும், நோன்பு கஞ்சி, ஃபித்ரா, போன்ற செயல்பாடுகள் குறித்தும் அறிக்கைகள் வாசிக்கப்பட்டன.
இந்த வருடம் நமதூர் சார்பாக மட்டும் ரூபாய் 100850 மதிப்பில் 507 குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்ய்யப்பட்டது.
 
 
 
நமதூர் மற்றும் நமதூரைச் சுற்றியுள்ள குன்னம், புதுப்பேட்டை, திருமாந்துறை கைகாட்டி, கீரனூர், ரஞ்சன்குடி, தேவையூர், வாலிகண்டபுரம், வல்லாபுரம் ஆகிய ஊர்களுக்கும் லெப்பைக்குடிக்காடு கிளை சகோதரர்களால் ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டதை அறியத்தந்தனர்.
இதுபோல் ரமளான் மாத அறிவுப்போட்டி மற்றும் இரவு தொழுகைக்குப்பிறகு நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதையும் தெரிவிக்கப்பட்டது.
பெயர் குறிப்பிட விரும்பாத நமதூர் தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொடுத்த 2 இலட்சம் ரூபாய் நன்கொடை லெப்பைக்குடிக்காடு கிளை நிர்வாகிகள் மூலமாக வி.களத்தூர், மற்றும் புதுஆத்தூர் மர்கஸ்களுக்கு (தலா 1 இலட்சம் ரூபாய்) மர்கஸ் கட்டிட‌ நிதியாக 29/08/2012 அன்றுநன்கொடையாக வழங்கப்பட்டதும் தெரிவிக்கப்பட்டது.
இவைகளையெல்லாம் கலந்துக்கொண்ட சகோதரர்களிடம் எடுத்துச்சொல்லப்பட அவர்களிடம் மென்மேலும் ஆர்வம் மேலிட்டதைக் காண முடிந்தது.
வட்டி இல்லா கடன் திட்டம் மூலம் தேவையுள்ள சகோதரர்களுக்கும், விண்ணப்பித்த சகோதரர்களுக்கும் பொருளாதார உதவிகள் செய்யப்பட்டன.தாருஸ்ஸலாம் தொடக்கப்பள்ளியின் பங்குகளில் இருந்து விலக விரும்பிய தவ்ஹீத் சகோதரர்கள் அதன் தற்போதைய நிலையை சகோதரர் K.A.சைய்யது முஸ்தபா அவர்கள் மூலமாக தெரிந்துக்கொண்டனர். மேலும் இந்த பிரச்சனையை விரைந்து முடிக்கும்படி பங்கேற்ற அனைத்து சகோதரர்களாலும் வலியுறுத்தப்பட்டது.
 
துஆவுடன் அமர்வு இனிதே நிறைவுபெற்றது!அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!
தகவல்
துபையிலிருந்து சாதிக் பாஷா
 

2 comments:

  1. சாகுல் ஹமீது10 September 2012 at 23:01

    தகவலுக்கு நன்றி.தங்கள் மேன்மேலும் சிறக்க எல்லாம் வல்ல நாயனிடம் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி.தங்கள் மேன்மேலும் சிறக்க எல்லாம் வல்ல நாயனிடம் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது

Followers