‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Tuesday 18 September 2012

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய சினிமா படத்தை தடை செய்ய வேண்டும்: சீமான்

மாலை மலர் செய்தி                             நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இஸ்லாமிய மக்களால் போற்றுதலுடன் கடைபிடிக்கப்படும் குர் ஆனை அருளிய இறைவனின் தூதர் நபிகள் நாயகத்தை சிறுமைப்படுத்தும் ஒரு திரைப்படத்திற்கு கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் வெளியிட அனுமதி வழங்கியுள்ள அமெரிக்க அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியதாகும்.
ஒரு பக்கம் இஸ்லாமிய நாடுகளின் வளங்களுக்காக அவைகளோடு அரசு ரீதியிலான நட்பு பாராட்டுவதும், மறுபக்கத்தில் அந்நாடுகளின் மக்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடிய படைப்புக்களை அனுமதிப்பதும் கடைந்தெடுத்த பொருளாதார சுய நல அரசியல் ஆகும். அதனை நன்கு புரிந்து கொண்டதனால்தான் உலக அளவில் அந்தத் திரைப்படத்திற்கு கடுமையான எதிர்ப்பு தோன்றியுள்ளது. இதனை அமெரிக்க அரசு புரிந்துகொண்டு, அந்தத் திரைப்படத்திற்கு தடை விதிப்பதுடன், இப்படிப்பட்ட படைப்புகள் எதிர்காலத்தில் வெளிவராமல் தடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
 
 

 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது

Followers