‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Wednesday 29 August 2012

பெற்றோரை பராமரிக்க தவறும் பிள்ளைகள் - கலெக்டர் நடவடிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தில் பெற்றோரை பாதுகாப்புடன் பராமரிக்காத பிள்ளைகளை மீது நடவடிக்கை எடுக்கப்படுமென கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் பெற்றோர் நல்வாழ்வு விதிகளின்கீழ் பராமரிப்பு கோரியும், தனக்கு சொந்தமான சொத்துக்களை மகன் சந்திரசேகரனிடமிருந்து மீட்டுத்தர கோரியும் வேப்பந்தட்டை அடுத்த கை.களத்தூர் மஜிரா பாதாங்கியை சேர்ந்த பெரியசாமி மனு அளித்துள்ளார்.
மனுவை விசாரித்து பெரியசாமிக்கு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் சட்டத்தின்கீழ் உரிய தீர்வு வழங்க மாவட்ட சமூகநல அலுவலர் பேச்சியம்மாளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணைக்கு சந்திரசேகரன் ஆஜராகாததால் மேல்முறையீடு அலுவலரான ஆர்டிஓ ரேவதிக்கு அனுப்பி விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் பெரியசாமிக்கு அவரது மகன் சந்திரசேகரன், உணவு, உடை, உறைவிடம் வழங்கி பராமரிப்பு தொகையாக மாதந்தோறும் ரூ.1500 வழங்க வேண்டும். மேலும் வைப்புத்தொகை ரூ.50,000 மற்றும் 6 பவுன் நகையை ஒரு மாதத்திற்குள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
60 வயதிற்கு மேற்பட்ட முதியோர் தங்களுக்கு ஏதேனும் உணவு, உடை பராமரிப்பு பிரச்னை இருப்பின் புகார் கொடுக்கலாம். புகாரின்பேரில் தமிழ்நாடு பெற்றோர் மற்றம் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு பராமரிப்பு சட்டப்படி உணவு, உடை, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கு உரிய நிவாரணம் பெற்று தரப்படும். பெற்றோரை பாதுகாப்புடன் பராமரிக்க தவறும் பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து ஆர்டிஓ ரேவதி அல்லது மாவட்ட சமூகநல அலுவலர் பேச்சியம்மாளிடம் மூத்த குடிமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

2 comments:

  1. லெப்பைக்குடிக்காடு TNTJ வில் உள்ளவர்கள் (அனைவரும் இல்லை) ஒரு சில கருப்பு ஆடுகள் தன் பெற்றோர்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்வதில்லை. ஏன்னெனில் மணைவி பேச்சை கோட்டு இவர்கள் இயக்கத்திற்கே அவமானம் உண்டு பண்ணுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அத்தகைய சகோதரர்கள் தங்கள் தவறை திருத்திக்கொள்ள அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.

      Delete

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது

Followers