‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.
Showing posts with label கலெக்டர் தரேஸ் அஹமது. Show all posts
Showing posts with label கலெக்டர் தரேஸ் அஹமது. Show all posts

Wednesday, 3 October 2012

வேலை வாய்ப்பற்றோர் உதவி பெரம்பலூர் கலெக்டர் அழைப்பு

பள்ளியில், எஸ்.எஸ்.எல்.ஸி., பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
இதற்கு, கல்வி தகுதியை பதிவு செய்து, ஐந்தாண்டு முடிவடைந்தவராக இருக்க வேண்டும், 30.09.2007 அன்றோ அதற்கு முன்னரோ, பதிவு செய்தவராக இருக்கலாம். மனுதாரர் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை, தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும்,

Monday, 10 September 2012

பெரம்பலூர் மாவட்ட சிறப்பு கிராம சபைக்கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளில், செப். 12-ம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது என்றார்.                          இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2012-13-ம் ஆண்டுக்கு நில அபிவிருத்திப் பணிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களில் பணிகள் மேற்கொள்வதற்கு விவசாயிகள் பட்டியல் வைக்கப்பட்டு அங்கீகாரம் பெறுதல். தேசிய கால் மற்றும் வாய் நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் வரும் 15-ம் தேதி முதல் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல் மற்றும் 19-வது கால்நடை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானிக்கப்பட உள்ளது.

Wednesday, 29 August 2012

பெற்றோரை பராமரிக்க தவறும் பிள்ளைகள் - கலெக்டர் நடவடிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தில் பெற்றோரை பாதுகாப்புடன் பராமரிக்காத பிள்ளைகளை மீது நடவடிக்கை எடுக்கப்படுமென கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் பெற்றோர் நல்வாழ்வு விதிகளின்கீழ் பராமரிப்பு கோரியும், தனக்கு சொந்தமான சொத்துக்களை மகன் சந்திரசேகரனிடமிருந்து மீட்டுத்தர கோரியும் வேப்பந்தட்டை அடுத்த கை.களத்தூர் மஜிரா பாதாங்கியை சேர்ந்த பெரியசாமி மனு அளித்துள்ளார்.

Followers