‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Thursday 30 August 2012

ஒசாமா கொல்லப்பட்டது எப்படி? அமெரிக்க "மாஜி' வீரர் புதிய தகவல்

'அமெரிக்க அதிரடி படையினர் நுழையும் முன்பே அபோதாபாத் பங்களாவில் அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன்  இறந்து கிடந்தார்' என, புத்தகம் ஒன்றில் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த அல்-குவைதா தலைவரான ஒசாமா பின்லாடன், கடந்த ஆண்டு மே மாதம், பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்க கடற்படை பிரிவின் (சீல்) முன்னாள் அதிகாரி மார்க் பிஸ்சோனெட் என்பவர், மார்க் ஒவன் என்ற புனைப் பெயரில், ஒசாமா பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அடுத்த மாதம் வெளியாக உள்ள இந்த புத்தகத்தில் எழுதியுள்ள விவரங்கள், "மெயில் ஆன்லைன்' என்ற, இணைய தள பத்திரிகையில் வெளியாகியுள்ளது.
அதில், "அபோதாபாத் பங்களாவில், அமெரிக்க படையினர் நுழையும் முன்பே, ஒசாமா பின்லாடன் இறந்து கிடந்தார். அவரது மார்பு பகுதியில் அதிரடி படையினர் சுட்டனர். எதிர் தாக்குதலுக்குக் கூட தயாராக இல்லாத நிலையிலேயே ஒசாமா பின்லாடன் இருந்தார். அந்த அறையில் கிடந்த துப்பாக்கிகளில் குண்டுகள் இல்லை' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம், வெளியாகும் முன்பே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புத்தகத்தில் கூறப்பட்டுள்ள சம்பவங்களைப் பார்க்கும் போது, "அபோதாபாத் பங்களாவில், ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தும் எண்ணத்தில் இருந்த ஒசாமா பின்லாடனைச் சுட்டு வீழ்த்தியதாக' அமெரிக்கா கூறி வந்த குட்டு தற்போது உடைபட்டுள்ளது. இந்த புத்தகத்தை எழுதிய அந்த எழுத்தாளருக்கு தற்போது மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாக, அமெரிக்க பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.
 
இந்த விடயத்தில் அமெரிக்காவின் தில்லுமுல்லுகள் போகபோகத்தான் வெளியுலகிற்கு தெரியவரும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது

Followers