‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Saturday 25 August 2012

தங்கத்தின் விலை கடும் உயர்வு

தங்கம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது
ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.23ஆயிரத்தை தாண்டி விட்டது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.39ம், சவரனுக்கு ரூ.312 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை சமீப காலமாக தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருகிறது. பண்டிகை சீசனுக்கு முன்பு வரை, ஏற்ற இறக்கமாக கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்த நிலையில், தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
திருமண சீசன் மற்றும் பண்டிகைக் காலம் ஆரம்பமாகி விட்ட நிலையில் இந்த புதிய உயர்வு தொடர்ந்து காணப்படுகிறது. கடந்த நான்கு நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து கொண்டே வந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.2,869 ஆக இருந்தது. இது நேற்று ரூ.2908 ஆக அதிகரித்தது. சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.23,264 ஆக உள்ளது. இது புதிய உச்சபட்ச அளவாகும்.

இதேபோல் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தால் விரைவில் ரூ.24 ஆயிரத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்துக்கு சற்றும் குறைச்சல் இல்லை என்பதைப்போல வெள்ளியின் விலையும் நேற்று கிலோருக்கு ரூ.2045 அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் வெள்ளி ரூ.60.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.56,405 ஆகவும் இருந்தது. இது நேற்று கிராம் ரூ.62.60 ஆகவும், கிலோ ரூ.58,450 ஆகவும் இருந்தது. ஒரே நாளில் கிராம் ரூ.2.20 அதிகரித்தது.

தங்கத்தின் விலை உயர்வுக்கு உள்ளூர் சந்தையில் அதிக தேவை இருப்பது மட்டும் காரணம் என்று கூற முடியாது. சர்வதேச அளவில் உள்ள நிலையை தான் முக்கிய காரணமாக கூற வேண்டும் என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிந்து வருவதும் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை தொடர்ந் தால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் தான் காணும் என்பதும் ஒரு கணிப்பு. இந்த நிலை நீடித்தால், விரைவில் 24 ஆயிரத்தை தொடுவது நிச்சயம் என்றும் சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது

Followers