‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Wednesday 29 August 2012

மொபைல் சார்ஜரை எப்படி பயன்படுத்துவது? சில டிப்ஸ்கள்!

மொபைல் சார்ஜ் செய்யும் போது, வரும் போன்கால்களுக்கு பதிலளிப்பதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

ஆனால் நிறைய பேர் மொபைலை சார்ஜரில் போட்டுவிட்டும், மொபைலில் பேசி கொண்டே இருக்கின்றனர். இதனால் ப்ளக்கில் இருந்து அதிகப்படியான நெருப்பு வெளியாக வாய்ப்பிருக்கிறது.
மொபைல் முழுமையாக சார்ஜாகிவிட்டது என்று சில மொபைல்களில் தகவல்கள் வெளியாகிறது. இந்த தகவலை மொபைலில் பார்த்த உடன் சார்ஜில் இருந்து மொபைலை நீக்கிவிடுவது நல்லது.
ஒவ்வொரு மொபைலுக்கும், எத்தனை மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும் என்று சில வரம்புகள் உள்ளது. இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். சிலர் இரவில் சார்ஜில் போட்ட மொபைலை காலையில் தான் எடுப்பார்கள். இது மிக ஆபாயத்தை ஏற்படுத்தும். இது போன்ற செயல்களால் மொபைல் வெடிப்பதற்கும் வாய்ப்புள்ளது.
சரியான மொபைல் சார்ஜரை பயன்படுத்துவது அவசியமாகிறது. தனது மொபைல் மாடலுக்கு பொருந்தாத சார்ஜரை கூட பொருத்தி பார்த்து சோதனை செய்கின்றனர். இப்படி மொபைலுக்கு பொருந்தாத சார்ஜரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஒரு மொபைலின் சார்ஜரை வேறொரு மொபைலில் கலட்டி போட்டு சிலர் சார்ஜ் செய்வதையும் நாம் அன்றாட வாழ்க்கைகளில் பார்க்கிறோம். இது போல் ஒரு மொபைலின் பேட்டரியினை, வேறொரு பேட்டரியில் போட்டு சார்ஜ் செய்வதும் தவறு.
பொதுவாக ஒரு பேட்டரி, வேறொரு மொபைலில் பொருந்தாது. ஆனால் சில மொபைல்கள் சார்ஜாக வாய்ப்பிருக்கிறது. இப்படி சார்ஜாகும் போது வெடிப்பு போன்ற சம்பவங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது.
 
மொபைலை சார்ஜ் செய்வது என்பது ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் இதை சரியாக செய்யாது போனால் அதன் விளைவுகள் அபாயகரமானதாக இருக்கும். மேலே கூறப்பட்டுள்ள தவறுகளை தவிர்ப்பது மிக நல்லது

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது

Followers