‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Monday 27 August 2012

சந்திரனில் முதலில் காலடி வைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் தனது 82 ஆவது வயதில் மரணம்

சந்திரனில் காலடி வைத்த முதலாவது மனிதர் எனும் அமெரிக்காவின் நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் நேற்று இரவு காலமானார். 1930ம் ஆண்டு பிறந்த சந்திரனில் ஆறு வயதில் தந்தியுடன் முதல் வான் வெளி பயணத்தை மேற்கொண்டார். 1950 ம் ஆண்டளவில் கோரிய யுத்தத்தில் யுஅமெரிக்க கடற்படை ஜெட் வீரராக கடமை புரிந்து, 1962ம் ஆண்டு நாசாவுடன் இணைந்தார். 1969ம் ஆண்டு ஜூலை 20ம் திகதி சந்திரனில் தரையிறங்கிய அப்போலோ 11 செய்மதியின் மூலம் சந்திரன் தரையில் முதல் காலடி எடுத்து வைத்தார்.

1971ம் ஆண்டு தனது இறுதி விண்வெளி பயணத்தை மேற்கொண்டிருந்தவர நாசாவிலிருந்து விலகி விண்வெளி ஆராய்ச்சியல் பேராசிரியராக தனது பணியை ஆரம்பித்தார். நேற்று இரவு 82 வயதில் நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் மரணமாடைந்துள்ளதாக அவரது குடும்பம் தெரிவித்துள்ளதோடு இம்மாதம் ஆரம்பத்தில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் தெரிவித்தனர்.
மேலும் கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவின் மிக உயரிய சிவிலியன் விருதான காங்கிரஸின் தங்க பதக்கத்தை பரிசாக வென் இமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது

Followers