‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Wednesday, 31 October 2012

பெரு நாள் வாழ்த்து ‘ஈத் முபாரக்’ சொல்லலாமா?...

பெருநாள் தினத்தில் ஒருவருக்கொருவர் ஈத் முபாரக் என்று சொல்லும் வழக்கம் சமுதாயத்தில் பரவி வருகிறது.
இது இஸ்லாத்தின் முக்கியமான ஒரு நபிவழி என்பது போல் மக்களால் கருதப்படுகிறது.

ஒருவர் தனது தாய் மொழியில் தனக்கு விருப்பமான சொற்களைப் பயன்படுத்தி குர்ஆன் ஹதீசுக்கு முரணில்லாத வகையில் துஆச் செய்யும் வகையில் வாழ்த்துவது தவறில்லை.
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் மகிழ்ச்சியைத் தரட்டும் என்றெல்லாம் கூறுவதில் மறுப்பு இல்லை.

ஆனால் குறிப்பிட்ட ஒரு சொல்லை அனைவரும் சொல்ல வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துவது என்றால் அது அல்லாஹ்வுக்கும்
அவனது தூதருக்கும் மட்டும் உள்ள அதிகாரமாகும்.

ஈத் முபாரக் என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவை கூட பயன்படுத்தியதில்லை.
அவர்கள் பயன்படுத்தாத இச்சொல்லை அவர்கள் பயன்படுத்தினார்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதை ஒரு சுன்னத் போல் ஆக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) சொல்லித் தந்தவைகளை மட்டும் தான் அப்படியே அரபு மொழியில் சொல்ல வேண்டும். மற்ற விஷயங்கள் அவரவர் தாய் மொழியில் தான் இருக்க வேண்டும்.

Tuesday, 30 October 2012

தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி?

மொபைல் போன்கள் நமக்கு மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்ட இந்த் காலத்தில் அவற்றை பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதில் மிக முக்கியமாக தண்ணீரில் விழுந்த போனை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.

சிலர் போன் தண்ணீரில் விழுந்த உடன் அவசர அவசரமாக ரெண்டு உதறு உதறி விட்டு உடனே ஆன் செய்து விடுவார்கள்.இதை மட்டும் நீங்கள் செய்யவே கூடாது.

உங்கள் போனில் இருந்து பாட்டரி, சிம்கார்ட் ,மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும். பின்னர் துணி அல்லது டிஸ்யூ பேப்பர் கொண்டு வெளி பாகங்களை துடைக்கவும்.

உங்கள் வீட்டில் Vaccum cleaner இருந்தால் அதனை Suction mode இல் வைத்து இப்போது உங்கள் போனை காட்டவும் இதனால் தண்ணீர் ஆவியாகி விடும்.

Vacuum cleaner இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் அரிசி

புயலின் எச்சரிக்கைகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் ..!

புயல் எச்சரிக்கைகளின் அர்த்தம்
 
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வருவதால் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. தொலைக்காட்சிகளிலும் வானிலை அறிவிப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் புயல் எச்சரிக்கை பற்றி கூறப்படும் சில குரியீட்டு எண்கள் பொதுமக்களில் ...
பலருக்கு இன்றளவும் விளங்கமலேயே இருக்கின்றது.
பொதுமக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகளையும், அந்த குறியீடுகள் குறித்த விளக்கங்களின் விபரம் பின்வருமாறு :
ஒன்றாம் எண் எச்சரிக்கையால், புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது என அர்த்தம். இரண்டாம் எண், புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.

மரணம் - பொய்க்கும் நாத்திகம்....!!!!

நேத்து வரைக்கும் நல்லாதானே இருந்தாரு...இன்னைக்கு பொசுக்குனு போய்ட்டாரு....

அட! காலையிலே தானே பாத்தேன்....அடடா...அதுகுள்ள என்னாச்சி அவருக்கு...

நைட் நல்லாதாங்க படுக்க போனாரு... காலையிலே பாத்தா...

சராசரி மனிதர்கள் வாயில் அன்றாடம் வலம் வரும் வார்த்தைகள் தான் இவை. சாதாரணமாக தெரியும் இவ்வெளிய வார்த்தைகளுக்குள் நாத்திகம் பதில் தர மறக்கும்/மறுக்கும் அனேக உண்மைகள் உறங்கிக்கொண்டிருக்கிறது... தட்டியெழுப்ப ட்ரை பண்ணுவோம்.

மரணம்: -

நாம் விரும்பினாலும்-விரும்பாவிட்டாலும் நம்மை வந்தடைவது உறுதி என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அப்படிப்பட்ட மரணம், மனிதன் உட்பட எல்லா உயிர்க்கும் பொதுவாக நிகழ்ந்தாலும் அஃது ஒரே மாதிரி நிகழ்வதில்லை என்பது தான் இவ்வாக்கத்தின் மையக்கருத்து.

அதற்கு முன்பாக, மரணம் குறித்து விக்கிபீடியா என்ன விளக்கம் தருகின்றது என்பதை பார்த்துவிடுவோம்.

இதுதான் புரட்சி!...

ஆம். அது ஒரு மாபெரும் புரட்சி!...

உலகம் இதுவரை கண்டிராத புரட்சி இருபத்தி மூன்றாண்டு கால புரட்சி...

ஆம். அது ஒரு மாபெரும் புரட்சி!...

இனி அவர்கள் பல கடவுள்களை வணங்க மாட்டார்கள் தங்களின் நாயன் ஒருவனே என்று உணர்ந்தவர்கள்...

ஆம். அது ஒரு மாபெரும் புரட்சி!...

இனி அவர்கள் கொள்ளையர்கள் இல்லை இனி அவர்கள் கவர்னர்கள் ஒரு பொருள் கொள்ளைப் போனாலும் உயிரைக் கொடுத்துக் காக்கும் காவலர்கள்...

ஆம். அது ஒரு மாபெரும் புரட்சி!...

இனி அவர்கள் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கமாட்டார்கள் பெண்களை தரம் தாழ்த்தி நடத்த மாட்டார்கள் இனி அவர்கள் மதுவை தொட மாட்டார்கள் விபச்சாரத்தை நெருங்க மாட்டார்கள்...

ஆம். இது தான் புரட்சி!...

ஒரு மனிதனின் வியாபார நோக்கத்தை மாற்றிய புரட்சி...
ஒரு மனிதனின் விருப்புவெறுப்பை மாற்றிய புரட்சி...

தமிழன் டி வி நிகழ்ச்சி அறிவிப்பு

நமதூர் வாசிகளுக்கு ஓர் நற்செய்தி

லப்பைக்குடிகாடு மகளிர் மேல் நிலைப் பள்ளியில்
07-10-2012 அன்று நடைப்பெற்ற
அன்னை ஆயிஷா மகளிர் கல்லூரி
அடிக்கல் நாட்டு விழா நிகழ்சியை
வரும் (2-11-2012) வெள்ளிக்கிழமை இரவு
இந்திய நேரம் 11 மணிக்கு
துபாய் நேரம் 9.30 மணிக்கு
தமிழன் டி வி யில் பாருங்கள்.
இப்படிக்கு
SP.Shamsudeen
LBK Sangam.

துபையில் சிறப்புடன் நடைபெற்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சி

மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டி, அமைதியை பரப்பும் நோக்கில் வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி டெய்ரா பகுதியில் அமைந்துள்ள தமுமுக அலுவலகத்தில் 27.10.2012, வெள்ளிக் கிழமை அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு மண்டலத் தலைவர் அதிரை சாகுல் ஹமீது தலைமை வகித்தார். அமீரகத் துணைத் தலைவர் ஹூசைன் பாஷா நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் அவசியத்தை எடுத்துரைத்தார்.
 
சவுதி அரேபியாவிலிருந்து வந்திருந்த அஃப்சலுல் உலமா பொறியாளர் ஜக்கரியா அவர்கள், முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு திருக் குர்ஆன், நபிமார்களின் வாழ்க்கை, வரலாற்று குறிப்புகள், பைபிள், இந்துக்களின் வேத நூல்களிலிருந்து பல்வேறு ஆதாரங்களை அடிப்படையாக வைத்து கேள்விகளுக்கு பதிலளித்தார். அதனையடுத்து, முஸ்லிம்களும் ஒரு சில விஷயங்களைக் குறித்து விளக்கங்கள் கேட்டு தெளிவுபெற்றனர். புதிதாக இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட பொறியாளர் முஹம்மது அவர்கள் தன்னுடைய மன மாறுதலுக்கான காரணத்தையும், அதனுடைய முக்கியத்துவத்தைக் குறித்தும் பேசினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மண்டல மாநாடு


Monday, 29 October 2012

பெருநாள் தொழுகை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

 
நமதூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  சார்பாக ஹஜ்ஜூப்பெருநாள் திடல் தொழுகை நமதூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்தைதிடலில்   27-10-2012 சனிக்கிழமை காலை சரியாக 07:30 மணிக்கு நடைபெற்றது.


இதில் மதுரையைச் சேர்ந்த சகோ.சம்சுதீன் அவர்கள் குத்பா பேருரையாற்றினார்.
இதில் பெருந்திரளான சகோதர சகோதரிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...

ஆண்கள் மருதானி இடுவது மார்க்கதில் ஆகுமானதா?

ஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைகளிலும் கால்களிலும் மருதாணி பூசிய ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் பெண்களுக்கு ஒப்ப நடந்ததால் அவரை நாடுகடத்துமாறு நபியவர்கள் உத்தரவிட்டதாகவும் இந்தச் செய்தி கூறுகின்றது.

இந்தச் செய்தியில் இடம் பெற்றுள்ள அபூஹாஷிம் மற்றும் அபூ யசார் ஆகிய இரண்டு அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையும் அறிஞர்களால் உறுதி செய்யப்படவில்லை. இதன் காரணத்தால் இந்தச் செய்தி பலவீனமானதாகும்.

ஆண்கள் மருதாணி பூசலாம் என்றோ பூசக் கூடாது என்றோ ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் நேரடியாக்க் கூறப்படவில்லை. ஆனால் இப்பிரச்சனைக்கு சரியான தீர்வை பின்வரும் பொதுவான செய்தியிலிருந்து அறியலாம்.

Followers