‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Thursday 15 November 2012

அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 5,000 தமிழர்கள் ஊர் திரும்புகின்றனர்

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைக்கு சென்று அங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ள 5,000 தமிழர்கள் உள்பட பல இந்தியர்கள் விரைவில் ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு  பொதுமன்னிப்பு அளிக்கப்படுவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அதன்படி சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதியில் இருந்து 2 மாத காலத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். அவர்களுக்கு எந்தவித அபராதமும் விதிக்கப்படாது. இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியேறாவிட்டால் சிறை தண்டனை மற்றும் அபராதம் உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 5,000 பேர் உள்பட ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர்.
இது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதர் எம்.கே. லோகஷே கூறுகையில்,
இங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களில் பலர் கேரளா, தமிழ் நாடு மற்றும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். கடந்த 2010ம் ஆண்டு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பால் 40,000க்கும் அதிகமான இந்தியர்கள் பலனடைந்தனர்.
தற்போது அமீரகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்டோர் உள்பட ஏராளமானோர் உள்ளனர். அவர்கள் எந்தவித பிரச்சனையும் இன்றி நாடு திரும்பத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது

Followers