‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Wednesday 21 November 2012

மும்பை பந்த் - பெண் கைது: நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கின்றோமா? முதல்வர் சவானுக்கு கட்சு கடிதம்!

மார்கண்டேயன் கட்சு
Press Council of India வின் தலைவரும் முன்னால் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான மார்கண்டேயன் கட்சு மஹராஷ்ட்ரா அரசை கடுமையாக சாடி நேற்று கடிதம் அனுப்பியுள்ளார்.

 
மஹராஷ்ட்ரா முதல்வர் சவானுக்கு அவர் அனுப்பிய கடிதத்திற்கு (மெயில்) உரிய முறையில் பதில் கிடைக்காததால் அடுத்த 5 மணி நேரத்தில் மிகவும் ஆத்திரமடைந்து மற்றுமொரு கடிதத்தை முதல்வருக்கு (மெயில்) அனுப்பியுள்ளார்.
 
தனது ப்ளாகில் முதல்வருக்கு அனுப்பிய இரண்டு கடிதத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
 
 
பால்தாக்ரேயின் மரணத்தை தொடர்ந்து ஒரு நாள் அறிவிக்கப்படாத பந்தி்னால் மும்பையில் கடைகள் மூடப்பட்டன.
 
ஒருவரின் மரணத்திற்காக இது போன்று பொதுமக்களுக்கு பாதிப்பு தரும் வண்ணம் கடைகளை மூடுவது சரியல்ல என்ற கருத்தில் ஒரு பெண் கருத்து தெரிவித்து இருந்தார். இதை பார்த்த சிவசேனா காரர்கள் அந்த பெண் வீட்டிற்கு சென்று ரகலை செய்தனர். காவல் துறையினர் ரகலை செய்தவர்களை கைது செய்யாமல் அந்த பெண்ணை மத உணர்வுகளை துண்டிய குற்றத்திற்காக கைது செய்தனர். மேலும் அந்த பெண்ணின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்த மற்றுமொரு பெண்ணையும் கைது செய்தனர்.
 
இதை கேள்விபட்ட கட்சு,
”பந்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பது எவ்வாறு மத உணர்வதை துண்டுவதாக ஆகும் ? Article 19(1)(a) படி பேச்சு சுதந்திரம் என்பது நமது நாட்டின் அரசயில் சாசன சட்டப்படி அனைவரின் அடிப்படை உரிமையாகும். நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கின்றோம் பாசிச சர்வாதிகார ஆட்சியில் அல்ல”
இவ்வாறு அந்தபெண்ணை கைது செய்திருப்பது 341 342 சட்டப்படி கிரிமினல் குற்றமாகும். எனவே அவரை கைது செய்த காவல் துறை அதிகாரியையும் உத்தரவு போட்டவர்களையும் கைது செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
 
இதை நீங்கள் செய்யத் தவறினால் அரசியல் சாசன சட்டப்படி நாட்டை வழி நடத்த தாங்கள் தகுதியற்றவராகிவிடுகின்றீர்கள். பிறகு அதனால் ஏற்படும் சட்டவிளைவுகளுக்கு தாங்கள் ஆளாக நேரம்”
என கடித்தில்(சுருக்கம்) குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த கடிதத்திற்கு உரிய பதில் கிடைக்காததால் இரண்டாவதாக முதல்வருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
 
அதில், (சுருக்கம்)
நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கின்றோமா ? ஒருவர் இறந்ததற்காக பந்த் நடத்தியதை ஆட்சேபித்த ஒருவரை எப்படி நீங்கள் கைது செய்வீர்கள் ? Article 19(1)(a) சட்டம் உங்கள் மாநிலத்தில் கிடையாதா?
தாங்கள் மவுனமாக இருப்பது இந்த பிரச்சனைக்கு தீர்வாகாது. அந்த பெண்னை கைது செய்தவர்கள் மீதும் அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்தியர்வகள் மீதும் தாங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை எனக்கு உடனடியாக தெரியப்படுத்துங்கள்
எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
 
கட்சுவின் கடிதத்தை பார்த்து சாவான் ஆடிப்போய் இருப்பதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது

Followers