‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Sunday 4 November 2012

TNTJ லப்பைக்குடிக்காடு துபை அமர்வு நவம்பர்-2012

ஏக நாயன் அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லெப்பைக்குடிக்காடு ஊர் கூட்டமைப்பின் வழமையான மாதாந்திர அமர்வின் நவம்பர் மாத அமர்வு 02/11/2012 வெள்ளிக்கிழமை மஃரிப் முதல் இஷா வரை துபை மண்டல தலைமை மர்கஸில் சிறப்புடன் நடைப்பெற்றது.
 
சகோதரர் அப்துல் மஜீது அவர்களுடைய தலைமையில் அமர்வு துவங்கியது.
அதைத் தொடர்ந்து இறை நினைவூட்டலான மார்க்க பயான் செய்யப்பட்டது.
சகோதரர் T.M.பஷீர் அஹம்மது அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.. இந்த பயான் இன்றைய சூழ்நிலைக்கு தகுந்ததாகவும்,மரண பயமின்றி உலகமாயையில் மூழ்கிகிடப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும் அமைந்தது.
 
அதனைத் தொடர்ந்து கடந்த ஒரு மாத கால செயல்பாட்டு அறிக்கையை சகோதரர் A.அப்துல் மஜீது மற்றும் சகோதரர்A.R.சம்சுதீன் ஆகியோரால் வாசிக்கப்பட்டது.
 
இதில் தாயகத்தில் கடந்த ஒரு மாதத்தில் நடைப்பெற்ற காரியங்களான தியாக திருநாளான ஹஜ் பெருநாள் திடல் தொழுகை, குர்பானி, ஜூம்ஆ உரை, தெருமுனைப் பிரச்சாரம், வாராந்திர நோட்டீஸ், தர்பியாக்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் விபரங்கள்,மாவட்ட செயல்பாடுகள், மாவட்டத்தின் பிறகிளைகளின் செயல்பாடுகள், சமுதாய நிகழ்வுகள் அனைத்தும் அமர்வில் வாசிக்கப்பட்டன.
 

குர்பானி விபரம்
மொத்தம் 20 மாடுகள் கூட்டு குர்பானி மூலம் குர்பானி கொடுக்கப்பட்டது.
மொத்தம் 449 இறைச்சி பொட்டலங்கள் தயார்செய்து நமதூரிலும் நமதூரைச்சுற்றியுள்ள ஊர்களுக்கும் தேவை உள்ளவர்கள் கண்டறிந்து கிளை சகோதரர்களால் விநியோகம் செய்யப்பட்டது.
பெருநாள் தொழுகை
பெருநாள் தொழுகை அல்லாஹ்வின் பேரருளால் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.
 
மழை காலமாக இருந்தும், பெருநாள் தினத்தன்று மழை இல்லாமல் பெருநாள் தொழுகை சந்தை திடலில் சிறப்பாக நடைபெற்றது.
மதுரைச் சேர்ந்த சகோதரர் சம்சுதீன் அவர்களால் பெருநாள் உரை நிகழ்த்தப்பட்டது.
இதில் எப்போதும் வருவதைக்காட்டிலும் அதிகமான சகோதர,சகோதரிகள் மற்றும் சிறுவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ்...
15000 ரூபாய் பெருநாள் வசூலாக கலந்துக்கொண்ட சகோதர,சகோதரிகளால் அளிக்கப்பட்டது.
இவைகளையெல்லாம் சகோதரர்களிடம் எடுத்துச் சொல்லப்பட அவர்களிடம் மென்மேலும் இந்த ஜமாஅத்தில் இணைந்து செயல்பட ஆர்வம் மேலிட்டதைக் காண முடிந்தது.
 
வட்டி இல்லா கடன் திட்டத்தின் மூலம் தேவையுள்ள, விண்ணப்பித்த சகோதரர்கள் அனைவருக்கும் கடன் உதவிகள் செய்யப்பட்டு அந்த சகோதரர்களின் பொருளாதார தேவைகள் சரிசெய்யப்பட்டது.
துபை தலைமை மர்கஸூக்கு கலந்துக்கொண்ட சகோதரர்கள் சந்தாவை கொடுத்து உதவினர்.
துஆவுடன் அமர்வு இனிதே நிறைவுபெற்றது! அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது

Followers