‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Thursday 15 November 2012

இக்வான்களின் இரட்டை முகம்

22/3/2004 அன்று இஸ்ரேலின் தாக்குதலில் பாலஸ்தீனின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் அஹ்மத் யாசீன் அவர்கள் படுகொலை செய்யபட்டார்கள்.அவரின் சிதைந்த உடலில் எடுக்கப்பட்ட பகுதில் பெரிய பகுதியாக ஐநூறு கிராம் அளவே இருந்தது.
கேடுகெட்ட இந்த இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து 23/3/2004 ஆம் திகதி எகிப்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது அதில் இக்வான்களின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
அவர்களில் தற்போது இக்வான்களின் மிக முக்கிய பிரமுகரான இசாம் அல் உர்யான் உட்பட பலர் கலந்துகொண்டு இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டித்தனர்.அந்த ஆர்பாட்டத்தில் இக்வான்களின் தலைவர்கள் வைத்த கோரிக்கையை இங்கு பதிகிறேன்.
கோரிக்கை ஒன்று:அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் உள்ள இஸ்ரேலின் தூதுவர்களை விரட்ட வேண்டும்.
கோரிக்கை இரண்டு:முஸ்லிம்களின் எதிரியான இஸ்ரேலுடனான் அனைத்து சமாதன ஒப்பந்தங்களையும் முறிக்க வேண்டும்.
கோரிக்கை மூன்று:அரபு நாடுகளின் அரபு லீக் உச்சி மாநாட்டில் இஸ்ரேலுடன் யுத்தம் அறிவிப்பதே தவிர வேறு முடிவு எடுக்க பட கூடாது.
அவர்கள் வைத்த கோஷம்:இஸ்ரேலுடன் ஜிஹாதை தவிர வேறு தேர்வு கிடையாது.
இது அவர்கள் ஆட்சிக்கு வரும் முன்பு சொன்ன பேசிய கோரிக்கைகளும் கூற்றுக்களுமாகும்.
ஆட்சிக்கு வந்த பின்பு அவர்கள் இஸ்ரேலுடன் வைத்த உறவை பாருங்கள்.
இஸ்ரேலின் அரசுக்கு எகிப்திய இக்வானிய ஜனாதிபதி எழுதிய கடிதத்தில் மதிப்புக்குரிய மேன்மைக்குரிய இஸ்ரேலிய........ என்று இஸ்ரேலை தமது மதிப்புக்குரிய நாடாக கருதினர்.
மேலும் அதே ஹமாசின் முக்கிய ராணுவ தளபதி அஹ்மட் ஜப்பாரி இஸ்ரேலால் சில மணித்தியாலங்களுக்கு முன் படுகொலை செய்ய்பட்டுல்ளார்.
இப்போது இக்வான்கள் பல வருடங்களாக வைத்த கோரிக்கையின் உண்மை தன்மை எங்கே?இஸ்ரேலுக்கான எகிப்தின் தூதுவர் வரவளைகப்பட்ட நோக்கம் புரிகிறதா?மக்களை ஏமாற்ற இது ஒரு அரச தந்திரம் என்பதை புரிய முடிகிறதா ?
எதிர்க்கட்சி ஆட்சியில் இருந்தால் இஸ்ரேலின் தூதுவரை விரட்ட வேண்டும் .சமாதான ஒப்பந்தம் மீறப்பட்டு இஸ்ரேலுடன் யுத்த நிலையை அறிவிக்க வேண்டும் என்று சொன்ன இக்வான்கள் ஆட்சியில் இருக்கும்போது எடுத்த நிலைப்பாடு முற்றிலும் மாறுபட்டு இருப்பதை தெட்டதெளிவாக காண முடிகிறதா இல்லையா ?
ஆட்சிக்கு வர முன் இக்வான்களின் கோரிக்கை இஸ்ரேலின் தூதுவரை விரட்ட வேண்டும் என்று இருந்தது ஆனால் ஆட்சியில் அவர்கள் இருக்கும்போது இஸ்ரேலின் தூதுவரை விரட்டவோ யுத்தத்தை அறிவிக்குமாறு கோரிக்கை வைக்கவோ அவர்கள் முன்வரவில்லை.
அரசியல் மேடைகளில் சாதாரண கட்சிகள் எதிர்கட்சியாக இருக்கும்போது மக்களை தூண்டிவிட அதில் தங்களின் அரச லாபங்களை அடைய எவ்வாறு மக்களை பயன்படுத்திவிட்டு ஆட்சிக்கு வந்ததும அதே நிலை இவர்களுக்கு வந்தால் தமது முன்னைய கோரிக்கைக்கு மாற்றமாக இருப்பார்களோ அதே நிலைதான் இக்வான்களின் அரச மோசடிகள் நமக்கு எடுத்துகாட்டுகின்றன.
தமது அரச விருப்புகளை வெறுப்புகளை மாற்று கட்சிகளை விமர்சித்தும் எதை கொண்டு விமர்சித்தார்கலோ அதில் எந்தவித நியாயமும் இல்லாத ஒரு அரசியல் கட்சி இஸ்லாமிய பெயரில் இருக்கும் என்றால் இக்வான்களை தவிர வேறு கட்சியை உதாரணமாக சொலவே முடியாது.
இதற்கு உதாரணமாக் இன்னும் பல விடயங்களை சொல்ல முடியும் கடைசியாக இவர்களின் இன்னொரு நிலைபாட்டை சொல்லி இதை முடித்து கொள்கிறேன்
காலித் குராபா என்ற பொலிஸ் அதிகாரி பற்றி இக்வான்களின் உத்தியோகபூர்வ தளம் சென்ற வருடம்16-07-2011 அன்று
சொன்னதையும் இப்போது இக்வான்களின் ஆட்சியில் அவர் நிலையயும் பாருங்கள் .
இக்வான்கள் சென்ற வருடம் சொன்னது :
காலித் குராபா என்ற பொலிஸ் அதிகாரி இரண்டாம் நிலை அதிகாரியாக இருந்த இவர் அலெக்ஸ்சாந்திரியாவின் உயரதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் அரச கைதிகளை சித்திரவதை செய்வதில் தேர்ச்சிபெற்றவர் இவர் கேடுகெட்ட முன்னைய ஆட்சியாளர் காலம் தொட்டு அரச கைதிகளுடன் கடுமையாக நடந்துகொள்ளும் ஒருவர்.
மேலும் இவர் பல வருடங்களாக மக்கள் எழுட்சியை தடை செய்யும் நடவடிக்கைக்கு பங்காற்றியுள்ளார்."
இது காலித் குராபா என்ற அதிகாரி பற்றி சென்ற வருடம் இக்வான்கள் அவர்களின் உத்தியோக பூர்வ இணையதளத்தில் வெளியிட்ட தகவல்.
ஆனால் அதே காலித் குராபா தற்போது இக்வான்கலின் ஜனாதிபதியால் உள்துறை அமைச்சருக்கு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுளார்.
இக்வான்களின் துரோக வரலாறு இன்னும் நீளும்.
உங்கள் சகோதரன் :அஹ்மத் ஜம்ஷாத்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது

Followers