‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Saturday 20 October 2012

பக்ரீத் பெருநாளில் பி.எட். கலந்தாய்வு ஒத்தி வைக்குமாறு மமக கோரிக்கை

முஸ்லிம்களின் பக்ரீத் பெருநாளில் நடைபெறவிருக்கும் பி.எட். கலந்தாய்வு மற்றும் கருத்தரங்குகளை ஒத்தி வைக்குமாறு மனிதநேய மக்கள் கட்சியின் மூத்தத் தலைவரும் இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா தமிழக உயர்கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மேலும் அக்கடித்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
 
வருகின்ற 27.10.2012 அன்று முஸ்லிம்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
 
அன்றைய தினத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் பி.எட். பயிற்சியில் பயின்றுவரும் மாணவ/மாணவியர்களுக்கான கவுன்சிலிங் மற்றும் கருத்தரங்கம் சென்னை, திருச்சி, கோவை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளதால் அதில் காலை 9:30 மணிக்கு பங்கேற்க வேண்டும் என்று மதுரை காமராஜர் பல்கலைக் கழக தொலைதூர கல்வி இயக்குநர் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
 பக்ரீத் தினத்தன்று தமிழக அரசு விடுமுறை நாளாகவும் அறிவித்துள்ளது. இப்புனிதநாளில் காலை 8 மணி முதல் 12 வரை முஸ்லிம்கள் தங்களின் இறை கடமைகளை நிறைவேற்றியவாறு இருப்பர். இந்த வேளையில் தேர்வு எழுத்துவதுதோ கவுன்சிலிங் மற்றும் கருத்தரங்குகளில் பங்கேற்பது என்பது சிரமம்.
 
எனவே 27.10.2012 நடைபெறவுள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக பி.எட். கவுன்சிலிங் மற்றும் கருத்தரங்க தேதிகளை மாற்றம் செய்து ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது

Followers