‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Wednesday 3 October 2012

கொசுவலை ஜன்னல்

கதவு, ஜன்னலை மூடி கொசு விரட்டி சுருள், காயில் வைத்தும், கொசுவை அழிக்கும் பேட் வைத்தும் இனி அவதிப்படவேண்டியதில்லை. மார்க்கெட்டிற்கு புதிதாக ரெடிமேடு ஜன்னல் கொசு வலை வந்து விட்டது. அலுமினிய பேனலில் அமைக்கப்பட்ட இந்த கொசு வலையின் எடை 200 கிராம் தான்.

கண்ணாடி ஜன்னல், மர ஜன்னல், இரும்பு ஜன்னல் என எந்த வகை ஜன்னலாக இருந்தாலும் எளிதாக பிட்டிங் மூலமாக பொருத்தி விடுகிறார்கள். ஆணி அடிக்காமல், துளையிடாமல் எளிதான முறையில் ஜன்னலில் பொருத்த முடியும். இந்த கொசு வலை ஜன்னலை உள்புறமாக திறந்து மூட முடியும்.
கொசு வலை ஜன்னலை திறந்த பின், வீட்டு ஜன்னலை திறக்கலாம். இந்த ஜன்னல் அமைக்க சதுரடிக்கு 222 ரூபாய் கட்டணம். வழக்கமான அளவில் (4 அடி அகலம் 5 அடி நீளத்தில்) ஜன்னல் இருந்தால் கொசு வலை அமைக்க சுமார் 4 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஜன்னலை திறந்தால் காற்று வரும், காற்று வந்தால் கொசு வரும் என்ற அச்சம் இனி தேவையில்லை.

இந்த கொசு வலை மாட்டி விட்டால் ஜன்னலை திறந்து வைத்து நிம்மதியாக தூங்க முடியும். வெள்ளை, ஐவரி, பிரவுண், கருப்பு மற்றும் மரக்கலரில் இந்த ரெடிமேடு கொசு வலை ஜன்னல் கிடைக்கும். ஆர்டரின் பேரிலும் ஜன்னல் வடிவமைக்கப்படுகிறது. வேறு கலரில் கொசு வலை தேவைப்பட்டால் அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அமெரிக்கா, தென் ஆப்பிரிக்காவில் இந்த கொசு வலை ஜன்னல்கள் அதிகளவு விற்பனையாகிறது. ஜன்னலை திறந்தால் காற்று வரும், காற்று வந்தால் கொசு வரும் என்ற அச்சம் இனி தேவையில்லை. இந்த கொசு வலை மாட்டி விட்டால் ஜன்னலை திறந்து வைத்து நிம்மதியாக தூங்க முடியும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது

Followers