‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Thursday 18 October 2012

TNTJ லப்பைக்குடிக்காடு துபை அமர்வு

ஏக நாயன் அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லெப்பைக்குடிக்காடு ஊர் கூட்டமைப்பின் வழமையான மாதாந்திர அமர்வின் அக்டோபர் மாத அமர்வு 05/10/2012 வெள்ளிக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் 07:00 மணி முதல் இஷா வரை துபை மண்டல தலைமை மர்கஸில் நடைப்பெற்றது.
சகோதரர் T.M.பஷீர் அஹம்மது அவர்களுடைய துவக்க உரையுடன் அமர்வு துவங்கியது.

அதைத் தொடர்ந்து இறை நினைவூட்டலான மார்க்க பயான் செய்யப்பட்டது.
சகோதரர் T.M.பஷீர் அஹம்மது அவர்கள் வருகின்ற மாதம் துல்ஹஜ் மாதம் என்பதால் ஹஜ் ஓர் பார்வை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஹஜ் மற்றும் உம்ராவின் செயல் விளக்கத்தை அனைவரும் புரியும்படி விளக்கினார்கள்.
தொடர்ந்து குர்பானியின் நோக்கம் மற்றும் சட்டதிட்டங்கள் பற்றியும் சகோதரரால் விளக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கூட்டு குர்பானி குறித்து அறிவிப்பு செய்யப்பட்டது
அதன் அமீரகப் (UAE) பொருப்பாளராக சகோதரர் அய்யம்பேட்டை A.S.அக்பர் அலி நியமிக்கப்பட்டார்.அவருடைய மொபைல் எண்: 050-7023134
தொகை 110 திர்ஹம் எனவும், குர்பானி கொடுக்க விரும்பும் சகோதரர்கள் தொகையை அல்லது பெயரை வருகின்ற 17-10-12 புதன் கிழமைக்கு முன் கொடுத்துவிடும்படி கேட்டுகொள்ளப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஒரு மாத கால செயல்பாட்டு அறிக்கையை ஊர் கூட்டமைப்பின் பொருப்பாளர்களால் வாசிக்கப்பட்டது.இதில் தாயகத்தில் நடைப்பெற்ற காரியங்கள், ஜூம்ஆ உரை, தெருமுனைப் பிரச்சாரம், வாராந்திர நோட்டீஸ், தர்பியாக்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் விபரங்கள், மாவட்ட செயல்பாடுகள், மாவட்டத்தின் பிறகிளைகளின் செயல்பாடுகள், சமுதாய நிகழ்வுகள் அனைத்தும் அமர்வில் தொகுத்து வாசிக்கப்பட்டன.


குறிப்பாக கடந்த அன்று புதுஆத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தைப் பற்றியும், அதில் நமதூரிலிருந்து பெருந்திரளான சகோதர, சகோதரிகள் கலந்துக்கொண்டதும் நினையூட்டப்பட்டது.

நமதூரில் செயல்படும் தாருஸ்ஸலாம் தொடக்கப்பள்ளியின் பங்குகளில் இருந்து விலக விரும்பிய தவ்ஹீத் சகோதரர்கள் அதன் தற்போதைய நிலையை சகோதரர் A.R.சம்சுதீன் அவர்கள் மூலமாக அறிந்து மிகவும் வேதனைப்பட்டனர். தொடர்ந்து தாருஸ்ஸலாம் டிரஸ்ட் நிர்வாகம் தவ்ஹீத் சகோதரர்களின் பங்குகளை திருப்பித்தர மறுப்பதோடு, அவர்களுக்கு இந்த பள்ளியின் பங்கின் மூலம் பொருளாதார இழப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இருப்பதாக தெரிகிறது. 

 
மேலும் ஏற்கெனவே துபையில் தாருஸ்ஸலாம் டிரஸ்டின் பொருப்பாளர்கள்
தவ்ஹீத் ஜமாஅத்திற்க்கு சொந்தமான பெருந்தொகை பணத்தை எடுத்துக்கொண்டு போனதோடு இதுவரை கணக்கு வழக்குகளைக்கூட தெரிவிக்க மறுத்து தவ்ஹீத் சகோதரர்களை குறைபேசி திரிகின்ற வரலாறு பல சகோதரர்களால் நினையூட்டப்பட்டு அதைப்போல் இந்த பள்ளிக்கூட விஷயத்தையும் விட்டுவிடாமல் இதற்கு சரியான தீர்வை தேடும்படி பங்கேற்ற அனைத்து சகோதரர்களாலும் வலியுறுத்தப்பட்டது.
வட்டி இல்லா கடன் திட்டம் மூலம் தேவையுள்ள சகோதரர்களுக்கும், விண்ணப்பித்த சகோதரர்களுக்கும் பொருளாதார உதவிகள் செய்யப்பட்டன.

இதில் ஏராளமான கொள்கைச் சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

துஆவுடன் அமர்வு இனிதே நிறைவுபெற்றது!

அல்லாஹ்வுக்கே புகழ்கள் அனைத்தும்!
 
மின்னஞ்சல் தகவல்
சாதிக் பாஷா - துபை








No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது

Followers