‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

‎அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்................. நமதூரிலும் நமதூரைச்சுற்றியும் நடந்த மற்றும் நடைபெறயுள்ள நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் அதை அன்புடன் வெளியிட காத்திருக்கிறோம்.இந்த தளத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அன்போடு வரவேற்கிறோம்.

Sunday 21 October 2012

அமீர் கானின் ஹஜ் பயணம்..

திரைப்பட நடிகர் அமீர்கான் தனது தாயார் மற்றும் குடும்பத்துடன் இந்த வருடம் ஹஜ்ஜுக்கு சென்றிருக்கிறார்.

இவர் மும்பையில் உள்ள அல் ஹாலித் டூர்ஸ் அன்ட் ட்ராவல்ஸ் எனும் நிறுவனத்தின் மூலம் தன்னுடைய ஹஜ் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இவர் தன்னுடைய தாயாருக்கு ஹஜ்ஜுக்கு அழைத்துச்செல்வதாக முன்பு வாக்குறுதி அளித்திருந்தாராம் அதை நிறைவேற்றும் முகமாக இந்த வருடம் சென்றிருக்கிறார்,நல்ல செய்தி..ஆனால் இவர் ஹஜ்ஜிலிருந்து திரும்ப வந்ததும் இவர் சார்ந்திருக்கும் திரைப்பட தொழில்தான் இந்த மக்களின் அனைத்து கலாச்சார சீரழிவுகளுக்கும் அடிப்படை காரணம் என்பதை உணர்ந்து இந்த தொழிலில் இருந்து விலகி வேறு நல்ல தொழிலில் ஏடுபட்டால் இவர் ஹஜ் நன்மை பயக்கத்தக்கதாக மாறிவிடும்.
ஒரு முறை நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் செய்கின்ற செயல்கள் சுயமாக செய்கிறோமா? அல்லது விதிப்படி நடக்கிறதா? என்று உமர்(ரலி) அவர்கள் கேட்டார்கள்.
கத்தாபின் மகனே! எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்ட விதிப்படியே நடக்கின்றன. ஒருவர் பாக்கிய சாலியாக இருந்தால் பாக்கியம் பெறுவதற்கே செயல்படுகிறார், துர்பாக்கியசாலியாக இருந்தால் துர்பாக்கியமடையும் வகையில் செயல்படுகிறார் என்று நபி அவர்கள் விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: திர்மிதி

எனவே இவர் அல்லாஹ்வின் நாட்டப்படிதான் பாக்கியம் பொருந்திய ஹஜ்ஜுக்கு சென்றிருக்கிறார் என்பதையும் அவர் உணர வேண்டும்..

இதுவரை இவர்தவறான தொழிலில் ஏடுபட்டு ஒரு உண்மையான இஸ்லாமியனாக வாழாமல் இருந்திருக்கலாம் அல்லாஹ் நாடினால் இவருக்கு நேர்வழிகிடைக்கும்...

மேலும் ஒருவர் தமக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரே ஒரு முழம் மட்டுமே இருக்கும் அளவிற்கு நல்ல செயல்களை செய்து வருவார். விதி அவரை வென்று கெட்ட செயல்களை செய்து முடிவில் நரகில் நுழைவர்.

இதேபோல் ஒருவர் நரகத்திற்கும், தனக்கும் இடையே ஒரு முழம் மட்டுமே உள்ள அளவிற்கு நரகவாசிகளின் செயல்களை செய்து வருவார். விதி அவரை வென்று சொர்க்கவாசிகளின் செயல்களை செய்து சொர்க்கம் நுழைவார் என்று நபி அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) நூல்: புகாரி, திர்மிதி

மேற்காணும் ஹதீஸின்படி இறைவன் சொர்க்கத்திற்குரியவர்களையும், நரகத்திற்குரியவர்களையும் நிர்ணயம் செய்து விட்ட போதிலும் நல்வழியின் மூலமாகவும், பிரார்த்தனையின் மூலமாகவும் நரகவாசி என்ற நிலையில் உள்ளவர் விதியை வென்று சொர்க்கவாசியாக மாறிவிடலாம். என்பதனை இந்த ஹதீஸ் மூலம் அறிய முடிகிறது. ஆயினும் இதுவும் அல்லாஹ்வின் அறிவுக்கு உட்பட்டதே என்பதை மறுக்க வேண்டாம்.

அப்படி மாறுவதற்கு இவர் முயற்சியும் பிரார்த்தணையும் செய்ய வேண்டும்.
இவர் ஒரு முன் மாதிரியாக இருக்கும் பட்சத்தில் இன்னும் இஸ்லாமிய பெயர் தாங்கிகளாக உள்ள ஏராளமான நடிகர்கள் இஸ்லாத்திற்கு வர வாய்ப்பு உண்டு..

"எவன் பாவமன்னிப்புத் தேடி ஈமான் கொண்டு நற்செயல்களையும் செய்து அப்பால் நேர்வழியும் அடைகிறானோ அவனுக்கு நிச்சயமாக நான் மிகவும் மன்னிப்பவனாக இருக்கின்றேன். அல்குர்ஆன் 20-82

என்று திருமறையில் இறைவன் கூறுவதிலிருந்தே நாம் உணரலாம். ஒருவன் தவறான வழியில் சென்று, பிறகு மனம் திருந்தி இறைவனிடம் பாவமன்னிப்பு தேடினால் அவனை அல்லாஹ் மன்னிப்பதாக கூறுகிறான். இருள் சூழ்ந்த உலகினில் வாழ்கின்றவர்களுக்கு ஒளியாக திகழ்வது திருமறையும், நபிவழி எனப்படும் ஹதீஸும்தான். இவற்றை பின்பற்றி நடந்தாலே நேர்வழி பெற்றவராக திகழ முடியும்.

ஒவ்வொரு குழந்தையும் இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றது. எனினும் அவர்களது பெற்றோர்களின் நிலையினால் அதைல் பின்னி பினைந்து விடுகின்றனர். அதனால்தான் எல்லா மக்களிடமும் குர்ஆன், ஹதீது போதனைகளை எடுத்துரைக்க வேண்டும். சிந்திக்கக் கூடிய மக்களுக்கு நல்வழியில் செல்வதற்கு விதி அமைந்துவிடும். இவற்றைத்தான் நபி அவர்கள் கூறினார்கள்:

நரகவாசிகளின் செயல்களை செய்பவர்கள் விதி அவரை வென்று சொர்க்கவாசிகளின் செயலை செய்து சொர்க்கத்தில் நுழைந்து விடுவர் என்றார்கள்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் அன்போடு வரவேற்கப்படுகிறது

Followers